For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ஹர்ஷல் பட்டேல் ஒரு ஜோக்கர்” பதற்ற சூழலிலும் ஆர்சிபி தப்பியதன் வியூகம் என்ன.. டூப்ளசிஸ் கூறிய உண்மை

கொல்கத்தா: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் கூட எப்படி வெல்ல முடிந்தது என ஆர்சிபி கேப்டன் டூப்ளசிஸ் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் முதல் எலிமினேட்டர் போட்டியில் நேற்று லக்னோ அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

 தோல்வி விளிம்பு

தோல்வி விளிம்பு

இப்போட்டியில் ஆர்சிபி அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகியிருந்தது என்பது தான் உண்மை. லக்னோ அணியில் முதல் 2 விக்கெட்கள் வேகமாக சென்ற போதும், கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் பிரமாண்ட பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஒவ்வொரு ஓவரிலும் 2 சிக்ஸர்களை விளாசி அச்சுறுத்தலை கொடுத்தனர்.

கடைசி நேர த்ரில்

கடைசி நேர த்ரில்

5 சிக்ஸர்களுடன் 79 ரன்களை சேர்த்தார். தீபக் ஹூடா 26 பந்துகளில் 45 ரன்களை விளாசினார். இதனால் லக்னோ அணி வெற்றி பெற கடைசி 12 பந்துகளில் 32 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது. நல்ல ஃபார்மில் கேப்டன் கே.எல்.ராகுல் இருந்ததால் ஆர்சிபி வீரர்களே பதற்றமடைந்தனர். ஆனால் ஹாசல்வுட் வீசிய 19வது ஓவரில் தான் ட்விஸ் இருந்தது.

தலைகீழாக மாறிய ஆட்டம்

தலைகீழாக மாறிய ஆட்டம்

இந்த ஓவரின் 4வது பந்தில் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் 5வது பந்தில் க்ருணால் பாண்ட்யா என அடுத்தடுத்து 2 விக்கெட்கள் விழுந்தது. இதுவே ஆர்சிபியின் வெற்றிக்கு அடித்தளம் போட்டது. இதன் பின்னர் வந்தவர்கள் ரன் அடிக்க யாரும் இல்லாததால் 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்களை இழந்து 193 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வென்றது.

எப்படி மீண்டு வந்தது

எப்படி மீண்டு வந்தது

இந்நிலையில் சிக்கலில் இருந்து மீண்டது குறித்து டூப்ளசிஸ் பேசியுள்ளார். அதில், இது என் வாழ்வில் ஸ்பெஷல் நாளாக அமைந்தது. ஆகாயத்தில் இருப்பது போன்று உணர்கிறேன். எங்கள் பவுலர்கள் மிகவும் அமையாதவும் தெளிவாகவும் இருந்தனர். கடைசி வரை எந்தவித பதற்றமும் இன்றி அதே நிதானத்துடன் இருந்தால் மட்டுமே தெளிவாக யோசிக்க முடியும். எங்களின் அழுத்தங்களை குறைக்கவும் ஒரு வழி இருந்தது.

பொறுமை எப்படி சாத்தியம்

பொறுமை எப்படி சாத்தியம்

இதை நாங்கள் ஒரு பெரிய போட்டியாகவே கருதவில்லை. சீட்டுக்கட்டில் இருக்கும் ஜோக்கர் கார்ட் போன்றவர் ஹர்ஷல் பட்டேல். ஆபத்தில் உதவும் ஒரு துருப்புச்சீட்டு. அவரின் 18வது ஓவர் தான் ஆட்டத்தை மாற்றியது. இதே போல ஐபிஎல்-ல் நான் கண்ட சிறந்த சதங்களில் ரஜத் பட்டிதார் அடித்ததும் ஒன்று. அவர் சதத்தை எப்படி சைலண்டாக கொண்டாடினார் என்பதை அவர் எந்தளவிற்கு பொறுப்பை மட்டும் உணர்ந்து ஆடியுள்ளார் என்பது தெரியும் என டூப்ளசிஸ் கூறினார்.

Story first published: Thursday, May 26, 2022, 10:11 [IST]
Other articles published on May 26, 2022
English summary
Faf duplessis on RCB vs LSG Match ( ஆர்சிபி vs லக்னோ போட்டி குறித்து டூப்ளசிஸ் பேச்சு ) லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் இக்கட்டான சூழலில் இருந்து ஆர்சிபி தப்பியது எப்படி என டூப்ளசிஸ் வியூகம் வகுத்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+