Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அதுக்குள்ள நன்றி மறந்துட்டீங்களே”.. சிஎஸ்கே போட்ட சுயநலமான பதிவு.. சோகத்தில் மூழ்கிய டூப்ளசிஸ்!

சென்னை: நன்றி இல்லாமல் சிஎஸ்கே போட்ட ஒரு இன்ஸ்டா பதிவுக்கு, டூப்ளசிஸ் வருத்தத்துடன் ரிப்ளை செய்த சம்பவம் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே அணிக்காக பல்வேறு போட்டிகளில் சிறப்பாக ஓப்பனிங்கை அமைத்துக்கொடுத்தவர் பாஃப் டூப்ளசிஸ்.

ஆனால் மெகா ஏலத்தின் போது அவரையே கைவிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நன்றி மறந்தது. ரூ.7 கோடி கூட கொடுத்து வாங்க முன்வராமல் ஆர்சிபி அணிக்கு விட்டுக்கொடுத்தது.

வீடியோ

வீடியோ

இதனால் பெரும் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் சென்னை அணி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதே போல டூப்ளசிஸே, தனது கிரிக்கெட் வாழ்கையில் முக்கிய அங்கமாக இருந்த சிஎஸ்கே அணிக்கும், ரசிகர்களுக்கும் நன்றி என மனம் உருகி வீடியோ வெளியிட்டிருந்தார்.

சிஎஸ்கேவின் செயல்

சிஎஸ்கேவின் செயல்

இந்த வருத்தம் கூட இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் உள்ள நிலையில் சிஎஸ்கே நன்றி மறந்து ஒரு செயலை செய்துள்ளது. அதாவது வங்கதேசத்தின் பிரபல உள்நாட்டு தொடரான பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் ( BPL) தொடர் நாளையுடன் முடிவடைகிறது. இதில் ஐபிஎல்-ஐ போலவே பல நாட்டு வீரர்களும் கலந்துக்கொண்டு விளையாடி வருகின்றனர்.

என்ன பதிவு

என்ன பதிவு

எனவே நாளையுடன் BPL முடிகிறது என புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதில் சிஎஸ்கேவில் இடம்பிடித்த மொயீன் அலி மற்றும் டுவைன் பிராவோ ஆகியோரின் புகைப்படத்தை மட்டும் பதிவிட்டுள்ளது. முன்னாள் வீரர் டூப்ளசிஸும் அதில் தான் விளையாடி வருகிறார் என்பதையே மறந்துவிட்டது.

Recommended Video

Why Devon Conway is Good Pick For CSK | IPL 2022 Auction | OneIndia Tamil
அதிர்ந்த டூப்ளசிஸ்

அதிர்ந்த டூப்ளசிஸ்

இதனைக்கண்டு அதிருப்தியடைந்த டூப்ளசிஸ், கமெண்ட்டில் உங்கள் பதிவில் என்னை விட்டுவிட்டீர்களே? நான் எங்கே அதில்? என்பது போல சோகமான எமோஜி ஒன்றை போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சென்னை அணி உங்களை மறந்தாலும், நாங்கள் என்றுமே மறக்கமாட்டோம் என புகழ்ந்து வருகின்றனர்.

Story first published: Friday, February 18, 2022, 16:20 [IST]
Other articles published on Feb 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+