For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பட்லர் ஒரு பக்கா ஜெண்டில்மேன்.. களத்தில் செய்த காரியத்தால் குவியும் பாராட்டு.. வேற லெவல்

மும்பை: ஐபிஎல் தொடரின் 24வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும், குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் பட்லர் செய்த காரியம் ரசிகர்களை நெகிழ செய்தது.

இன்றைய ஆட்டத்தின் போது குஜராத் அணி தொடக்கத்தில் தடுமாறியது. பிறகு ஹர்திக் பாண்டியா தனது அதிரடி பேட்டிங் மலம் ரன்கள் குவித்தார்.

33 பந்துகளில் அரைசதம் விளாசிய ஹர்திக் பாண்டியா , தொடர்ந்து அதிரயாக ஆடி 52 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார்

ஆரஞ்ச் நிற தொப்பி

ஆரஞ்ச் நிற தொப்பி

இந்தப் போட்டி முன் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 15வது சீசனில் 141 ரன்கள் அடித்திருந்தார். ஆரஞ்ச் தொப்பிக்கான பந்தயத்தில் 15வத இடத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா கிடுகிடுவென மேலே ஏறி, முதல் இடத்திற்கு வந்துவிட்டார். இதனால் 218 ரன்களுடன் முதலிடத்தில் இருந்த ஜாஸ் பட்லர், ர்திக் தன்னை முந்தியதை தெரிந்ததும், தனது ஆரஞ்ச் நிற தொப்பியை அவரே கழற்றிவிட்டார்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

போட்டியின் நடுவில் ஆரஞ்ச் நிற தொப்பியை கழற்ற வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை. ஆனால், அறம் சார்ந்து செயல்பட்ட ஜாஸ் பட்லர், தனது இடம் சென்றுவிட்டது என தெரிந்த உடன் அந்த ஆரஞ்சு நிற தொப்பியை கழற்றினார். பட்லரின் இந்த செயலுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ஜெண்டில்மேன்

ஜெண்டில்மேன்

ஜாஸ் பட்லர் ஒரு ஜெண்டில்மேன் என்று பாராட்டு தெரிவித்துள்ள யுவராஜ் சிங், அவரிடமிருந்து சக வீரர்கள் கற்று கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். ஒரு வேலை, அஸ்வினை மறைமுகமாக தாக்கி யுவராஜ் சிங் இப்படி பதிவு போட்டாரா என்று தெரியவில்லை. அஸ்வின் காயமடையாமல் ரிட்டயர் ஆனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இந்த நிலையில், மீண்டும் பேட்டிங் செய்ய வந்த ஜாஸ் பட்லர், தொடக்கம் முதலே காட்டு அடி அடித்தார். இதனால் ரன்கள் மளமளவென உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 49ஆக இருந்த போது ஜாஸ் பட்லர் மட்டுமே 48 ரன்களை அடித்திருந்தார். சிக்சர், பவுண்டரி என தெறிக்கவிட்டார் பட்லர். இதனால் 4.2வது ஓவரில் ராஜஸ்தான் அணி 50 ரன்களை கடந்தது.

மீண்டும் கைப்பற்றினார்

மீண்டும் கைப்பற்றினார்

23வது பந்தில் பட்லர் அரைசதம் அடித்தார். எனினும் அவர் ஆட்டமிழந்த உடன் ராஜஸ்தான் அணி சரிவை நோக்கி சென்றது. இந்த இன்னிங்ஸ் மூலம் மீண்டும் அவர் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்ச் நிற தொப்பியை தனதாக்கி கொண்டார். ஒரே போட்டியில் ஜெண்டில்மேனாக நடந்து கொண்டும், மீண்டும் அதிக ரன்கள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்து அசத்தி இருக்கிறார் ஜாஸ் பட்லர்.

Story first published: Thursday, April 14, 2022, 23:38 [IST]
Other articles published on Apr 14, 2022
English summary
IPL 2022 – Fans appreciates Jos buttler action in field vs GT பட்லர் ஒரு பக்கா ஜெண்டில்மேன்.. களத்தில் செய்த காரியத்தால் குவியும் பாராட்டு.. வேற லெவல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+