5 வருட சம்பள தொகை.. பிரித்வி ஷா என்ன செய்தார் தெரியுமா.. ஆச்சரியத்தில் வாயை பிளந்த ரசிகர்கள்!!
மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் பிரித்வி ஷா தனது 5 வருட சம்பளத்தை வைத்து செய்துள்ள விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு U 19 உலகக்கோப்பை தொடரில் கேப்டனாக வழிநடத்தி வெற்றி கண்டவர் பிரித்வி ஷா.
அதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் குறிவைக்கும் வீரராக இவர் திகழ்ந்து வருகிறார்.

நட்சத்திர வீரர்
நடப்பு சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியே இவரை மீண்டும் தக்கவைத்து சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தனது நீண்ட நாள் கனவாக மும்பையில் உள்ள பாந்த்ராவில் சொகுசு அப்பார்ட்மண்டில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீட்டின் மொத்த விலை மதிப்பு ரூ. 10.5 கோடி ஆகும்.

அப்படி என்ன உள்ளது
8வது மாடியில் அமைந்திருக்கும் இந்த வீடு மொத்தமாக 2,209 சதுர அடி கொண்டதாகும். இங்கு இல்லாத வசதிகளே எனும் அளவிற்கு கட்டப்பட்டுள்ளது. இதனை வாங்க முன்பணமாக மட்டும் ரூ.53.50 லட்சம் கொடுத்து கடந்த 31ம் தேதி ஒப்பந்தம் செய்துள்ளார். இன்று இதற்கான பத்திரப்பதிவு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.

ஐபிஎல் வருமானம்
பிரித்வி ஷாவுக்கு கடந்த 2018ம் ஆண்டு ரூ.1.2 கோடி கொடுத்து டெல்லி வாங்கியது. இந்தாண்டு ரூ.7.50 கோடி கொடுத்து தக்கவைத்தது. இதுவரை மொத்தமாக ஐபிஎல் தொடரில் மட்டும் ரு.12.30 கோடி சம்பாதித்துள்ளார். இதனால் ஐபிஎல் தொடரில் சம்பாதித்த 90% சதவீத பணத்தை வீட்டில் மட்டுமே முதலீடு செய்துள்ளார்.

பிரித்வி புறக்கணிப்பு
நடப்பு தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள பிரித்வி ஷா 259 ரன்களை குவித்துள்ளது. இதில் 2 அரைசதங்கள் அடங்கும். அவரின் ஸ்ட்ரைக் ரேட் அட்டகாசமாக 159.88 ஆக உள்ளது. அனைத்து தொடர்களிலும் தன்னை நிரூபித்தும், அதிக உடல் எடை என்ற காரணம் கூறி இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications