Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியிடம் அந்தரங்க கேள்வி கேட்ட ரசிகர்.. வெட்கப்பட்டு சிரித்த தோனி.. வீடியோ இதோ

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியிடம் ரசிகர் ஒருவர் அந்தரங்க கேள்வி கேட்டு. தோனியை வெட்கப்பட வைத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடருக்காக சூரத்தில் பயிற்சி முகாமில் பங்கேற்று வருகிறது. இதில் தோனி வெறித்தனமாக பயிற்சி செய்து வருகிறார்.

சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவில் தோனி வெறித்தனமாக பயிற்சி செய்து வருகிறார். பேட்டிங்கிலும் பெரிய ஷாட்களை அடி சிக்சர்களை பறக்கவிட்டு வருகிறார்.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

ஐபிஎல் தொடரில் கடந்த 2 சீசன்களாக தோனி சரிவர விளையாவில்லை. 2020ஆம் ஆண்டு சீசனில் 200 ரன்களும், 2021ஆம் ஆண்டு சீசனில் 114 ரன்களும் அடித்துள்ளார். இதனால் பழைய ஃபார்மை மீட்டு இம்முறை பேட்டிங்கிலும் அதிரடி காட்டும் முனைப்பில் தோனி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

வெட்கப்பட்ட தோனி

வெட்கப்பட்ட தோனி

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் தோனி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். அப்போது சென்னை அணி குறித்து பல கேள்வி தோனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு தோனியும் பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் எழுந்து தோனியே வெட்கப்படும் வகையில் கேள்வி ஒன்றை முன்வைத்தார்.

யார் நம்பர் 1

யார் நம்பர் 1

தோனியிடம் நான் உங்களிடம் ஒரு பெர்ஷனல் கேள்வியை கேட்க விரும்புகிறேன்.. உங்களால் பதில் அளிக்க முடியுமா என்று கேட்டார். இதனால் சிரித்த தோனி, நீங்கள் கேளுங்கள் அது எந்த அளவுக்கு பெர்ஷனல் என்று பார்த்து பதில் அளிக்கிறேன் என்று கூறினார். அதற்கு அந்த ரசிகர், களத்தில் நீங்கள் தான் நம்பர் 1 என்று எங்களுக்கு தெரியும்.

மனைவி

ஆனால் வீட்டில் எப்படி யார் நம்பர் 1 என கேட்டார். இதனை கேட்டதும் தோனி வெட்கப்பட்டார். அப்போது அரங்கமே சிரிப்பலையில் நிறைந்தது.அதற்கு தோனி , ஷாக்சி தான் நம்பர் 1. அரங்கில் இருக்கும் அனைவருக்குமே தெரியும்,மனைவி தான் நம்பர் 1 என்று பதில் அளித்தார். சில நாட்களுக்கு முன்பு ஷாக்சி அளித்த பேட்டியில், தமக்கும், தோனிக்கும் பிரவைசியே இல்லை. தோனிக்கு மனைவியாக இருப்பது கஷ்டம் என்ற பதில் அளித்தார்.

Story first published: Thursday, March 17, 2022, 18:59 [IST]
Other articles published on Mar 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+