“யாருப்பா நீ விநோதமா பண்ற” விராட் கோலிக்காக ரசிகர் செய்த விஷயம்.. இதை சரியா கவனிச்சீங்களா??
அகமதாபாத்: ஆர்சிபி அணியின் போட்டியில் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத விஷயம் சைலண்டாக நடந்துள்ளது.
Recommended Video
ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்தாண்டும் ஆர்சிபி அணியின் கோப்பை கனவு தகர்ந்து தொடரில் இருந்து வெளியேறியது.

ஆர்சிபியின் தோல்வி
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது.

ரசிகரின் செயல்
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஆட்டத்தின் 2வது ஓவரில் பிரஷித் கிருஷ்ணா வீசிய பந்தை எதிர்கொள்ள விராட் கோலி தயாராக நின்றுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென களத்திற்குள் ஓடிவந்த ரசிகர் ஒருவர் வேகமாக கோலியை பார்த்து ஓடிச்சென்றார். ஆனால் அவர் என்ன செய்தார் என்பது தான் சுவாரஸ்யமே.

சுவாரஸ்ய நிகழ்வு
வேகமாக ஓடிச்சென்ற அவர், விராட் கோலியை எந்தவித தொந்தரவும் செய்யவில்லை. கோலிக்கு அருகில் சென்று அவரை அருகில் இருந்து பார்த்துவிட்டு, உற்சாகத்தில் துள்ளி குதித்து ஓடிவிட்டார். விநோதமாக இருக்கிறாரே என கோலியும் வியப்புடன் பார்த்து நின்றார்.
கோலி சொதப்பல்
ரசிகர்கள் உற்சாகப்படுத்திய போதும், விராட் கோலி பெரிதாக சோபிக்கவில்லை. 8 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் வெறும் 7 ரன்களுக்கு நடையை கட்டினார். சிறப்பான தொடக்கம் கொடுத்திருந்தால் வென்றிருக்கலாம் என கோலி மீது ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications