Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாப்பம்பட்டி அணியாக மாறிய மும்பை இந்தியன்ஸ்.. மெகா ஏலத்தில் பரிதாப நிலை.. தப்பிக்க வழி உண்டா?

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி செய்த தவறால் அணியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாளான நேற்று அனைத்து அணிகளும் விறுவிறுப்பாக முன்னணி வீரர்களை தேர்வு செய்தனர்.

தொடக்கத்தில் எந்தவித ஆர்வமும் காட்டாத சென்னை அணி கூட கடைசியில் அடுத்தடுத்து வீரர்களை வாங்கியது. ஆனால் மும்பை அணி தான் எதுவுமே செய்தாதது போன்று இன்னும் அமைதி காத்து வருகிறது.

முதல் ஏலமே ஷாக்

முதல் ஏலமே ஷாக்

நேற்று முதல் பகுதி ஏலத்தில் பொறுமை காத்த மும்பை அணி, திடீரென தனது முதல் ஏலத்திலேயே இஷான் கிஷானை ரூ.15.25 கோடிக்கு வாங்கி அதிர்ச்சி கொடுத்தது. மும்பை அணி ஏலத்தில் செலவிட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். இனியாவது தொடர்ந்து வீரர்களை வாங்கும் என எதிர்பார்த்த நிலையில் பணத்தை செலவிட முன்வரவே இல்லை.

கோபத்தில் ரசிகர்கள்

கோபத்தில் ரசிகர்கள்

இதன் பின்னர் நீண்ட நேரம் கழித்து அந்த அணி பேபி ஏபிடிவில்லியர்ஸ் என்றழைக்கப்படும் தென்னாப்பிரிக்காவின் U19 வீரர் டேவல்ட் ப்ரேவிஸை ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது. தொடர்ந்து பாசில் தம்பியை ரூ.30 லட்சத்திற்கும், முருகன் அஸ்வினை ரூ.1.6 கோடிக்கும் ஏலம் எடுத்தது. இந்த 4 வீரர்களை மட்டுமே முதல் நாள் முடிவில் மும்பை ஏலம் எடுத்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இருப்பதிலேயே மிகக்குறைந்த அளவிலான வீரர்களை ஏலம் எடுத்த அணியாக உள்ளது.

கடும் சிக்கல்

கடும் சிக்கல்

முதல் நாளின் போது தான் பல முன்னணி வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள். 2வது நாளில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள் மற்றும் U19 வீரர்கள் மட்டுமே ஏலம் விடப்படுவார்கள். இதனால் கையில் ரூ.27 கோடியே 85 லட்சம் மீதம் வைத்துள்ள போதும் மும்பை அணிக்கு பெரும்பாலும் புதுமுக வீரர்களே கிடைப்பார்கள். இது அந்த அணிக்கு ப்ளேயிங் 11ல் பெரும் பாதிப்பை உண்டாக்கக்கூடும்.

தப்பிக்க ஒரே ஒரு வழி

தப்பிக்க ஒரே ஒரு வழி

இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்க மும்பை அணிக்கு ஒரே வழி தான் உண்டு. சுரேஷ் ரெய்னா, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஏலம் போகாத பல முன்னணி வீரர்கள் இன்று கடைசியில் ஏலம் விடப்படுவார்கள். அவர்களில் இருந்து சிறந்த வீரர்களை குறைந்த தொகையில் எடுத்துக்கொண்டால் மும்பை அணிக்கு பணமும் மிஞ்சும். இதுதான் அவர்களின் திட்டமாக கூட இருக்கலாம்.

Story first published: Sunday, February 13, 2022, 10:38 [IST]
Other articles published on Feb 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+