Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை பாராட்டிய சிஎஸ்கே.. பதிலுக்கு சென்னை ரசிகர் போட்ட ஒற்றை ட்வீட்.. பினிஷ்

மும்பை: தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை பாராட்டி சிஎஸ்கே அணி போட்ட ட்வீட்டிற்கு ரசிகர்கள் கொடுத்த ரிப்ளை இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் தனது அதிரடி பேட்டிங்கால் தனி கவனத்தை ஈர்த்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபியில் தோற்றுவிடும் என நினைத்த போது, தனது அதிரடியால் வெற்றி பெற்றுக்கொடுத்தார்.

ஸ்பெஷல் இன்னிங்ஸ்

ஸ்பெஷல் இன்னிங்ஸ்

170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணி 87 ரன்களுக்கெல்லம் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 44 ரன்களை விளாசி வெற்றி பெற்று தந்தார். ஆர்சிபி இதற்கு முன்னர் விளையாடிய 2 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் 32 (14), 14 (7) என அடித்திருந்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 3 போட்டிகளிலுமே நாட் அவுட்டாக இருந்தது தான். இதனால் அடுத்த இந்தியாவின் புதிய ஃபினிஷர் என பாராட்டி வருகின்றனர்.

சிஎஸ்கே ட்வீட்

சிஎஸ்கே ட்வீட்

இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கிற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ட்வீட் போட்டிருந்தது. அதில் "டாப் குவாலிட்டி! நல்லா இருக்கு தினேஷ் கார்த்திக்" என மிகுந்த உற்சாகத்துடன் பாராட்டியிருந்தது. ஆனால் இதனை பார்த்த சென்னை அணி ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

ரசிகர்களின் கமெண்ட்

ரசிகர்களின் கமெண்ட்

அந்த ட்வீட்டிற்கு கமெண்ட் போட்ட ரசிகர் ஒருவர், "அது உங்களுக்கு நல்லா தான் இருக்கும், ஆனா நாங்க நல்ல இல்ல" இதற்கு வட சென்னை படத்தில் வரும் பிரபலமான ஒரு காட்சியை வைத்து மீம்ஸும் போட்டுள்ளனர். இதே போல மற்றொரு ரசிகர் " ஏற்கனவே கொலவெறில இருக்கும் போது.. இது எல்லாம் தேவையா கோபி" என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

சிஎஸ்கேவின் பரிதாபம்

சிஎஸ்கேவின் பரிதாபம்

ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் மோசமான தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளது. கேப்டன்சி மாற்றம், தீபக் சஹார் இல்ல, தோனியின் தலையீடு என பல பிரச்சினைகள் இருப்பதால், இனி எப்படி அந்த அணி மீளப் போகிறது என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். அந்த அணி அடுத்ததாக வரும் ஏப்ரல் 9ம் தேதியன்று ஐதராபாத் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, April 6, 2022, 16:48 [IST]
Other articles published on Apr 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+