
சுவாரஸ்யமே இல்லை
கூடுதலாக 2 புதிய அணிகள், சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை போன்ற முக்கிய அணிகளின் தோல்விகள், இளம் வீரர்களின் அட்டகாச ஆட்டங்கள் என பல திருப்புமுணைகளுடன் ஐபிஎல் நடைபெற்று வருகிறது. எனினும், இதில் சுவாரஸ்யம் இல்லை என்பது தான் ரசிகர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் பிட்ச் தான்.

பிரச்சினை என்ன
ஐபிஎல்- ன் சிறப்பம்சம் என்னவென்றால் எதிர்பாராத திருப்பங்கள், யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்கவே முடியாது என்பது தான். ஆனால் கடந்த சீசனில் டாஸின் போதே ஒவ்வொரு போட்டியின் முடிவுகளும் தெரியவந்தது. அதாவது டாஸ் வென்று ஒரு அணி பவுலிங் தேர்வு செய்தால் போதும் வெற்றி என்று இருந்தது. 2வது இன்னிங்ஸில் பனிப்பொழி இருக்கும் என்பதால், பந்துகள் நழுவிச்செல்லும். சரியான லைனில் போட முடியாது

தொடரும் ஏமாற்றம்
இதே நிலைமை தான் இந்த சீசனிலும் தொடர்கிறது. நடப்பு சீசனில் இதுவரை 4 போட்டிகள் முடிந்துள்ளன. இந்த நான்கு போட்டியிலுமே டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்யும் அணிகள் தான் வெற்றி பெற்றுள்ளன. தோல்வியடைந்த அனைத்து அணிகளின் கேப்டன்களும் பனிப்பொழிவு தான் காரணம் குற்றம்சாட்டினர். இதனால் இனி வெற்றி பெற டாஸ் வெல்லுங்கள் என்ற எண்ணம் ரசிகர்களிடையே உருவாகிவிட்டது.

பிசிசிஐ நடவடிக்கை
இந்த சீசனில் ஒவ்வொரு மைதானத்திலும் 5 வெவ்வேறு தன்மை கொண்ட பிட்ச்-கள் தயார் செய்யப்பட்டதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அதற்கான பலன் எதுவுமே தெரியவில்லை என வல்லுநர்கள் குறைக்கூறுகின்றனர். எனவே இதுகுறித்து பிசிசிஐ விரைந்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications