Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது அஸ்வின் ஸ்டைல்.. புதிய முறையில் பேட்டிங் செய்த அஸ்வின்.. ரசிகர்களுக்கு அளித்த ஆச்சரியம்

மும்பை: கிரிக்கெட் உலகில் ரசிகர்களுக்கு எப்போதுமே புதுமையை புகுத்தி வரும் அஸ்வின், நேற்று பேட்டிங்கில் புதிய ஸ்டைலில் பேட்டிங் செய்தார்.

அஸ்வின் உங்களுக்கு ஒரு பந்துவீச்சாளராக தானே தெரியும்.ஆனால் அஸ்வின் தனது சிறிய வயதில் அணிக்காக ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாடியவர்.

எப்போதும் பந்துவீச்சில் புதுமையை புகுத்தும் அஸ்வின், கேரம் பால், ஸ்டாப் பால் போன்ற புது வகையில் பந்துவீசி அசத்தினார்.

டெஸ்டில் பேட்டிங்

டெஸ்டில் பேட்டிங்

ஆனால் அஸ்வின், நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் தான் கலக்கி இருக்கிறார். இந்திய அணியில் இடம் பிடிக்க ஆர்வம் காட்டும் அஸ்வின், தற்போது டி20 பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் இதுவரை 5 சதம் விளாசியுள்ள அஸ்வின், இதுவரை 2931 ரக்ளை அடித்துள்ளார்.

பேட்டிங் பயிற்சி

பேட்டிங் பயிற்சி

ஆனால் இதே ஃபார்மை ஓயிட் பால் கிரிக்கெட்டில் அவர் வெளிக்காட்டியது இல்லை. அதற்கு ராஜஸ்தான் அணி ஒரு நல்ல வாய்ப்பை தந்துள்ளது. எப்போதும் கிரிக்கெட்டை அறிவியல் பூர்வமாகவும், அதில் உள்ள விதிகளை எப்படி பயன்படுத்துவது போன்ற டேக்னிக்கை அஸ்வின் கற்று வருகிறார்.

ஹாக்கி ஸ்டைல்

ஹாக்கி ஸ்டைல்

நேற்றைய ஆட்டத்தில் கூட , குல்தீப் யாதவ் ஓவரை எதிர்கொள்ளும் போது ஹாக்கி பேட்டை வைத்து ஹாக்கி வீரர்கள் அடிப்பதற்கு நிற்பது போல் அஸ்வின் பேட்டை தரையோடு தரை வைத்து நின்று பந்துவீச்சாளரை குழப்பினார். பந்து பேட்டிற்கு வரும் போது நார்மலாக நின்று அடித்தார். இப்படி வித்தியாசமாக ஆடியதன் மூலம் 38 பந்துகளில் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

Recommended Video

IPL 2022 Rajasthan Royals-ஐ ஓடவிட்ட Delhi Capitals அபார வெற்றி | Oneindia Tamil
அஸ்வின் கருத்து

அஸ்வின் கருத்து

அஸ்வின் பேட்டிங்கை பார்க்கும் போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்தர்பால் பேட்டிங் ஸ்டைல் தான் நினைவுக்கு வந்தது. இது குறித்து பேசிய அஸ்வின், தாம் முன்வரிசையில் ஆட நேரிடும் என்று ராஜஸ்தான் நிர்வாகம் ஏற்கனவே கூறிவிட்டது,அதனால் தாம் பேட்டிங் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தினேன். ரன்களை குவிக்கும் ஷாட் மற்றும் தூக்கி அடிப்பது குறித்து பயிற்சி மேற்கொண்டேன். அது நேற்று நல்ல பலனை தந்தது என்றார்.

Story first published: Thursday, May 12, 2022, 17:30 [IST]
Other articles published on May 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+