Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த தங்கத்தை அப்படியே தூக்கிட்டு வாங்க..ஆஸிக்கு இவர் கண்டிப்பா வேணும்.. யார் இந்த அர்ஷ்தீப்

மும்பை: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

Recommended Video

IPL 2022 CSK vs PBKS: Fans Praise Arshdeep Singh’s Slog Over Bowling | OneIndia Tamil

23 வயதான அர்ஷ்தீப், டி20 போட்டிக்கு பந்துவீசுவதற்காகவே அளவு எடுத்து தயாரித்தது போல் இருக்கிறார்.

பெங்களூரு அணியின் ஹர்சல் பட்டேலை விட, அபாரமாக பந்து வீசுகிறார். இந்த காரணத்துக்காக தான் அர்ஷ்தீப்பை பஞ்சாப் அணி ஏலத்தில் விடாமல் தக்க வைத்தது.

நெருக்கடியான கட்டம்

நெருக்கடியான கட்டம்

நேற்று ஆட்டத்தில் கூட , சிஎஸ்கே அணி 16வது ஓவரில் 23 ரன்களை விளாசியது. இதனால் 4 ஓவருக்கு 47 ரன்கள் அடிக்க வேண்டும். களத்தில் ஜடேஜா, ராயுடு மற்றும் பின்வரிசையில் தோனியும் இருக்கிறார். இந்த கட்டத்தில் தான் அர்ஷ்தீப் சிங் பந்துவீசுகிறார். ஆட்டத்தின் முக்கியமான 17வது ஓவரில் அர்ஷ்தீப் அபாரமாக பந்துவீசி 6 ரன்களை மட்டும் தான் விட்டு கொடுத்தார்.

எதிரே தோனி

எதிரே தோனி

இதில் அவர் பயன்படுத்திய யுத்திகள் கிரிக்கெட் விமர்சகர்களை வெகுவாக கவர்ந்தது. 18வது ஓவரை வீசிய ரபாடா 6 ரன்களை விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்துவிட்டார். இதனையடுத்து ஆட்டத்தையே தீர்மானிக்க கூடிய 19வது ஓவரை வீசும் வாய்ப்பும் அர்ஷ்தீப்க்கு வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை அவர் தோனிக்கு பந்துவீச வேண்டும்.

அசத்தல் பந்துவீச்சு

அசத்தல் பந்துவீச்சு

தோனியோ செம பார்மில் உள்ளார். அந்த ஓவரில் ஒரு 15 ரன்கள் அடித்தால் கூட, கடைசி ஓவர் எளிமையாகிவிடும். இதனால் பெரிய நெருக்கடியில் அர்ஷ்தீப் பந்துவீசினார். இந்த ஓவரில் கிட்டதட்ட தோனியின் விக்கெட் அர்ஷ்தீப் காலி செய்திருப்பார். ஆனால் ரபாடா செய்த தவறால் அது நடக்கவில்லை. அந்த ஓவரில் வெறும் ஒரு பவுண்டரி உள்பட 8 ரன்கள் மட்டுமே அர்ஷ்தீப் விட்டு கொடுத்தார்.

இந்தியாவுக்கு தேவை

இந்தியாவுக்கு தேவை

இது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது வெறும் 23 வயதில் தோனி, ஜடேஜாவையே தனது பந்துவீச்சு மூலம் அர்ஷ்தீப் நெருக்கடி அளித்தது தான். இதனால் பந்துவீச்சில் கலக்கும் அர்ஷ்தீப் சிங்கிற்கு உடனடியாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கி, அவரை உலககோப்பை தொடருக்கு தயார் படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர், அர்ஷ்தீப் இதுவரை 31 ஐபிஎல் போட்டியில் விளையாடி 33 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

Story first published: Tuesday, April 26, 2022, 12:37 [IST]
Other articles published on Apr 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+