Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ப்பா.. என்னா ஒரு ப்ளான்” ஒரு வீரரை வீழ்த்த இவ்வளவு ரிஸ்க்கா.. பிரஷித் கிருஷ்ணாவுக்கு பாராட்டு மழை!

மும்பை: லியாம் லிவிங்ஸ்டனின் விக்கெட்டிற்காக பிரஷித் கிருஷ்ணா போட்ட பவுலிங் திட்டம் பாராட்டை பெற்று வருகிறது.

ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி சிறப்பான பேட்டிங்கால் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்களை சேர்த்தது.

லிவிங்ஸ்டனின் விக்கெட்

லிவிங்ஸ்டனின் விக்கெட்

பஞ்சாப் அணியின் மான்ஸ்டராக உருவெடுத்துள்ள லியாம் லிவிங்ஸ்டனுக்கு இந்த போட்டியிலும் 15வது ஓவரிலேயே பேட்டிங் களமிறங்க வேண்டியிருந்தது. கடந்த குஜராத் அணிக்கு எதிராக அவர் அடித்த 117 மீ சிக்ஸர் மற்றும அதிரடிகளால், இன்றும் அதே போன்ற சம்பவம் உள்ளது என பஞ்சாப் அணி ஃபீல்ட் செட்டிங்கை அடிக்கடி மாற்றி அமைத்தது.

பிரஷித்தின் திட்டம்

பிரஷித்தின் திட்டம்

ஆனால் ஒரே ஒரு சிம்பிள் ப்ளானுடன் பிரஷித் கிருஷ்ணா களமிறங்கினார். லிவிங்ஸ்டனுக்கு பிரஷித் கிருஷ்ணா ஒட்டுமொத்தமாக 8 பந்துகளை வீசினார். இதில் 7 பந்துகள் வைட் லைனுக்கு அருகில் வீசப்படும் அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் தான். ஏனென்றால் நடப்பு தொடரில் லிவிங்ஸ்டன் அடித்த அனைத்து சிக்ஸர்களும் லெக் சைட் மட்டுமே வந்துள்ளன. ஆஃப் சைட்டில் பவுண்டரி தூரம் என்பதால் அவர் அடித்ததே இல்லை. இதனை பிரஷித் சரியாக பிடித்துக்கொண்டார்.

என்னதான் நடந்தது

என்னதான் நடந்தது

17வது ஓவரில் லிவிங்ஸ்டனுக்கு 2 பந்துகளை பிரஷித் வீசினார். இதில் இரண்டிலுமே ரன் பெரிதாக அடிக்க முடியவில்லை. இதன் பின்னர் 19வது ஓவர் முழுவதுமாக லிவிங்ஸ்டனுக்கு எதிராக பிரஷித் வீசினார். ஆனால் இந்த ஓவரிலும் அனைத்து பந்தும் அவுட்சைட் ஆஃப் திசை தான். முதல் பந்து சிங்கிள், 2வது பந்து வைடாக சென்றது. அடுத்துப்போடப்பட்ட பந்தை முழு பலம் கொடுத்து சிக்ஸருக்கு விரட்டினார்.

கடைசி நேர ட்விஸ்ட்

கடைசி நேர ட்விஸ்ட்

இவர் எப்படியும் வைட் லைன் தான் என நினைத்த லிவிங்ஸ்டன் 5வது பந்தை சற்று நகர்ந்து வந்து பவுண்டரிக்கு விரட்டினார். இந்த சூழலில் தான் பிரஷித்தின் ப்ளான் வெற்றி பெற்றது. 5வது பந்துக்கு 'ரவுண்ட் தி விக்கெட்' வீச, அதையும் வைட் லைன் என லிவிங்ஸ்டன் நகர்ந்தார். ஆனால் அது லெக் சைட் யார்க்கராக சென்று ஸ்டம்புகளை பதம் பார்த்தது. ஒரு பவுண்டரி சென்றாலும், அதிரடி வீரர் லிவிங்ஸ்டனை சரியான திட்டம் மூலம் முன்கூட்டியே அவுட்டாக்கி வெளியேற்றியது ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.

Story first published: Saturday, May 7, 2022, 19:11 [IST]
Other articles published on May 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+