Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சத்தியமா இப்படி ஒரு ரிவியூ உங்க வாழ்க்கையில் பார்த்திருக்க மாட்டீங்க.. ஆர்சிபி ஸ்பெஷல்

மும்பை: ஐபிஎல் வரலாற்றிலேயே இப்படி ஒரு டிஆர்எஸ் ரிவியூவை நாங்கள் பார்த்தது இல்லை என்று ஆர்சிபியை பார்த்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கொல்கத்தா, பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டத்தில் தான் இப்படி ஒரு காமெடி சம்பவம் நிகழ்ந்தது.

ஆட்டத்தின் 16வது ஓவரில் கொல்கத்தா அணி 104 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதிர்சசி ரிவியூ

அதிர்சசி ரிவியூ

அப்போது ஆட்டத்தை சீக்கிரம் முடிக்கனும் என்று பெங்களூரு கேப்டன் டுபிளசிஸ் நினைத்து இருப்பாரோ என்னவோ.. கொல்கத்தா வீரர் வருண் சக்ரவர்த்திக்கு ஹர்சல் பட்டேல் பந்துவீசி முடித்த போது திடீரென்று பெங்களூரு அணி நடுவரிடம் டிஆர்எஸ் ரிவியூ கேட்டது.

பேட்டில் பட்டது

பேட்டில் பட்டது

அப்படி ஒரு சம்பவமும் நடக்கலேயே என நடுவரும், சரி நம்ம கடமையை செய்வோம் என்று மூன்றாம் நடுவருக்கு ரியூவை அனுப்பினார். அப்போது மறு ஆய்வில் பந்து நேராக பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது.

இப்படி செய்யலாமா?

இப்படி செய்யலாமா?

பந்துக்கும், பேட்டுக்கும் ஏணி வச்சா கூட தொடாதே என்ற நிலையில் இருந்ததால் இதனை அவுட் இல்லை என்று நடுவர் அறிவித்துவிட்டார். இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கிண்டல் அடித்தனர். சிஎஸ்கேவின் தோனி பட்டறையில் இருந்து வந்துவிட்டு, இப்படி ரிவியூவை வீணடிக்கலாமா டுபிளஸிஸ் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

வீணாகும் நேரம்

வீணாகும் நேரம்

ஆட்டத்தில் தவறு நிகழ கூடாது என்பதற்காக தான் இந்த ஆண்டு, ஒன்றுக்கு பதிலாக 2 டிஆர்எஸ் வாய்ப்பை வழங்கியது. ஆனால் வீரர்கள் இதனை வேண்டும் என்றே வீணடித்து, போட்டியை விறுவிறுப்பாக பார்க்கும் ரசிகர்களுக்கு எரிச்சலை தருவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இதே போன்று தேவையில்லாமல் அடிக்கடி முன்றாம் நடுவரின் உதவியை நடுவர்களும் கேட்பதாக ரசிகர்கள் புகார் கூறியுள்ளனர்.

Story first published: Wednesday, March 30, 2022, 23:22 [IST]
Other articles published on Mar 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+