Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. சிஎஸ்கே vs ஆர்சிபி போட்டியில் இன்று விருந்து ரெடி.. காரணம் என்ன?

மும்பை: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு ஸ்பெஷல் விஷயம் காத்துள்ளது.

49வது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்ற சூழலில், 2வது போட்டியில் கம்பேக் கொடுக்க ஆர்சிபி காத்துள்ளது.

முக்கியமான போட்டி

முக்கியமான போட்டி

இதுமட்டுமல்லாமல் இரு அணிகளுக்கும் இது ப்ளே ஆஃப் ரேஸுக்கான போட்டியாகும். ஆர்சிபி அணி இதில் வெற்றி பெற்றால் தான் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்காவது மீண்டும் செல்ல முடியும். மற்றொரு புறம் சிஎஸ்கே அணி இதில் தோல்வியடைந்துவிட்டால் ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிவிடும். இதனால் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து

ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து

இந்நிலையில் இன்று ரசிகர்களுக்கு பேட்டிங் விருந்து உள்ளது. சென்னை அணியின் மிகப்பெரிய கவலையாக இருந்த ஓப்பனிங் ஜோடி மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளது. கடந்த போட்டியில் டெவோன் கான்வே 85 ரன்களும், ருதுராஜ் கெயிக்வாட் 99 ரன்களும் அடித்து ருத்ர தாண்டவம் ஆடினர். இன்று போட்டி நடைபெறவுள்ள புனே மைதானத்தில் தான் அந்த ஸ்கோரை அடித்திருந்தனர்.

ஆர்சிபி அணி ஃபார்ம்

ஆர்சிபி அணி ஃபார்ம்

மற்றொருபுறம் ஆர்சிபி அணியிலும் ஓப்பனிங் ஜோடி தற்போது தான் கம்பேக் கொடுத்துள்ளனர். ஃபார்மில் இல்லாமல் இருந்த விராட் கோலி கடந்த போட்டியில் தான் 58 ரன்களை அடித்தார். அவருடன் டூப்ளசிஸும் இன்று இணைந்துவிட்டால் ஆர்சிபியின் ஓப்பனிங்கையும் யாராலும் தடுக்க முடியாது. எனவே இன்று கண்டிப்பாக ஒரு அதிக ஸ்கோர் கொண்ட போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளேயிங் 11-ன் கணிப்பு

ப்ளேயிங் 11-ன் கணிப்பு

சிஎஸ்கே : ருதுராஜ் கெயிக்வாட், டொவோன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ஷிவம் தூபே, தோனி, ஜடேஜா, முகேஷ் சௌத்ரி, மஹீஷ் தீக்‌ஷணா, துஷார் தேஷ்பாண்டே, பிராவோ

ஆர்சிபி : விராட் கோலி, டூப்ளசிஸ், ராஜத் பட்டிதார், க்ளென் மேக்ஸ்வெல், சபாஷ் அகமது, தினேஷ் கார்த்திக், மஹிபால் லாம்ரர், ஹசரங்கா, முகமது சிராஜ், ஹாசல்வுட், ஹர்ஷல் பட்டேல்

Story first published: Wednesday, May 4, 2022, 15:08 [IST]
Other articles published on May 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+