Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இவர எடுக்கவா அங்க போனிங்க”.. பணத்தை தேவையின்றி செலவிடும் சிஎஸ்கே.. மெகா ஏலத்தில் சொதப்பல்!

பெங்களூரு: முன்னணி வீரர்களெல்லாம் 5 கோடிக்கு கிடைத்த போது கோட்டையை விட்ட சிஎஸ்கே திடீரென இளம் வீரருக்கு அதிக தொகையை செலவளித்திருப்பது ரசிகர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் நாளான நேற்று சிஎஸ்கே யாரேனும் அடிப்படை தொகையில் கிடைப்பார்களா என்பது போன்றே உட்கார்ந்திருந்தது.

பெரிய வீரர்கள் யாரையும் சிஎஸ்கே எடுக்காமல் இருந்ததால் நேற்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

ஏமாற்றும் சிஎஸ்கே

ஏமாற்றும் சிஎஸ்கே

இந்நிலையில் இன்றும் அணியின் திட்டம் தான் என்னவென்று புரியாமலேயே உள்ளது. அந்த அணியானது முன்னணி வீரர்கள் டூப்ளசிஸ், டேவிட் வார்னர், ஷிகர் தவான் ஆகியோருக்கெல்லாம் போட்டியிட்ட சிஎஸ்கே பட்ஜெட் இடிக்கும் என நினைத்து ரூ. 5 கோடியுடன் பின் வாங்கியது. ஆனால் வயதான உத்தப்பா, அம்பத்தி ராயுடு, பிராவோ ஆகியோரை மட்டும் 4 - 5 கோடிகள் செலவளித்து வாங்கியிருந்தது.

நிம்மதி பெரு மூச்சு

நிம்மதி பெரு மூச்சு

இன்று யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்காக பெரும் தொகையை செலவிட போட்டிப்போட்டது. ஆனால் கடைசி நேரத்தில் குஜராத் அணி முந்திக்கொண்டதால் சிஎஸ்கே ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்திருந்தனர். அந்த தொகையை மேலும் சிறந்த ஆல்ரவுண்டர் ஒருவர் மீது போடும் என காத்திருந்தனர்.

இறுதி ட்விஸ்ட்

இறுதி ட்விஸ்ட்

இறுதியில் இந்திய ஆல்ரவுண்டர் ஷிவம் தூபேவிற்காக ரூ. 4 கோடியை செலவிட்டு சிஎஸ்கே எடுத்துள்ளது. அனைவரும் அவருக்கு ரூ. 1 - 1.5 கோடியே அதிகம் எனக்கூறிய போது சிஎஸ்கே அணி ரிஸ்க் எடுத்து பணத்தை செலவிட்டுள்ளது. சர்வதேச களம் காணாத தூபே இதுவரை ஐபிஎல் தொடரிலும் பெரிதாக சோபித்தது இல்லை.

மோசமான புள்ளிவிவரம்

மோசமான புள்ளிவிவரம்

ஐபிஎல் தொடரில் இதுவரை 24 போட்டிகளில் விளையாடி 399 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவரின் சராசரி 22 ரன்கள் மட்டுமே ஆகும். இதே போல பவுலிங்கில் 11 இன்னிங்ஸ்களில் போட்டிகளில் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அவரின் பவுலிங் சராசரி 32 ரன்களுக்கும் மேல் உள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

தப்பிக்க வழி உண்டா?

தப்பிக்க வழி உண்டா?

சென்னை அணிக்கு கையில் மீதம் ரூ.16 கோடியே 45 லட்சம் உள்ளது. இதனை வைத்து இனி வரும் U 19 வீரர்களை வாங்குவது மட்டுமே அந்த அணிக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கப்போகிறது. ஆனால் அவர்கள் எந்தளவிற்கு ஐபிஎல் போட்டிகளில் சரியாக இருப்பார்கள் என்பது கேள்விக்குறி தான்.

Story first published: Sunday, February 13, 2022, 14:26 [IST]
Other articles published on Feb 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+