Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜிம் எல்லாம் ஓகே.. ஆனால் ரன் வர மாட்டுங்குதே.. கோலியை கிண்டல் செய்யும் ரசிகர்கள்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது ஜிம்மே கதி என்று இருக்கிறார்.

வாழ்க்கையில் எதையாவது பண்ணணும்னா ஃபர்ஸ்ட் உங்க உடம்பை ரெடி பண்ணுங்க என்று சூர்யா வாரணம் ஆயிரம் படத்தில் சொல்வாரே அதை தான் விராட் கோலி செய்து வருகிறார்.

விராட் கோலி தற்போது பேட்டிங்கில் ரன் வந்தாலும் பழைய மாதிரி அடிப்பதில்லை. இதனால் விராட் கோலி ரசிகர்களும் வேதனையில் உள்ளனர்.

இந்த நிலையில், தொடர்ந்து 2 போட்டியில் கோல்டன் டக் ஆனதால், ஒரு உதவியற்றவர் எப்படி உணர்வாரோ அப்படி இருந்தேன் என்று கோலி கூறினார், கோலி போன்றோர் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டால், அவர்கள் முதலில் தஞ்சம் அடைவது உடற்பயிற்சி கூடத்தில் தான்.

IPL 2022 – fans trolls Virat Kohli work out exercise video

விராட் கோலி இன்று பளுதுக்கும் பயிற்சி மற்றும் மற்ற பயிற்சிகளை செய்து அதன் வீடியோவை டிவிட்டரில் போட்டு இருந்தார். அதில் வேலையை நிறுத்தலாம் என்று யார் சொன்னது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில, விராட் கோலியின் வீடியோவுக்கு கிழ் பலரும், ஜிம் எல்லாம் ஓகே. எப்போது தான் ரன் அடிப்பிங்கனு கமெண்ட் போட்டு கிண்டல் அடித்துள்ளனர்.

ஆர்சிபி தற்போது 12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளை பெற்றுள்ளத. அந்த அணி எஞ்சிய 2 போட்டியில் வென்றால் பிளே ஆப் வாய்ப்பு தகுதியாகி விடும். தற்போது விராட் கோலி மட்டும் பழைய பார்ம்க்கு திரும்பினால், அப்போது இருக்கு கச்சேரி..

Story first published: Friday, May 13, 2022, 0:09 [IST]
Other articles published on May 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+