Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்??.. விஸ்வரூபம் எடுத்த கொரோனா அச்சுறுத்தல்.. பிசிசிஐ அவசர ஆலோசனை!

மும்பை: ஐபிஎல் தொடரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், இந்தாண்டும் பாதியிலேயே தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி கடந்த 4 வாரங்களாக சுவாரஸ்யத்துடன் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

 கொரோனா

கொரோனா

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கடந்த ஏப்ரல் 16ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் அணியின் பிசியோதெரபிஸ்ட் பாட்ரிக் ஃபர்ஹார்ட்டிற்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அறிகுறிகள் இன்றி தொற்று பாதிப்பு இருந்ததால், அவர் 7 நாட்களுக்கு குவாரண்டைன் செய்யப்பட்டார். மற்ற வீரர்களுக்கு எந்த பாதிப்பு இல்லை எனத்தெரிவித்ததால் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

புதிதாக ஒருவருக்கு உறுதி

புதிதாக ஒருவருக்கு உறுதி

இந்நிலையில் இரண்டே நாட்களில் டெல்லி அணியின் மற்றொரு வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அணியில் இன்று எடுக்கப்பட்ட ராபிட் ஆண்டிஜன் சோதனையில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஒட்டுமொத்த அணியும் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த போட்டிக்கான அனைத்து பயிற்சிகளும் நிறுத்தப்பட்டன.

வலுக்கும் எச்சரிக்கை

வலுக்கும் எச்சரிக்கை

இதனையடுத்து ஐபிஎல் தொடர் நடைபெறுவதிலேயே சிக்கல் உருவாகியுள்ளது. சமூக வலைதளங்கள் முழுவதும், ஐபிஎல் தொடரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பணத்தை பெரிதாக கருதி ரத்து செய்யாமல் இருந்தால் பல முன்னணி வீரர்களும் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் இருக்கும் ரசிகர்களும், வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended Video

IPL 2022: Delhi Capitals hit by Covid-19 outbreak; squad under isolation | OneIndia Tamil
அவசர ஆலோசனை

அவசர ஆலோசனை

இதற்காக பிசிசிஐ சார்பில் அவசர அவசரமாக ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். கடந்த சீசனிலும் இதே போன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, பாதியிலேயே போட்டிகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 18, 2022, 17:01 [IST]
Other articles published on Apr 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+