Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்றைய ஐபிஎல் போட்டி ரத்து??.. அதிகரித்த கொரோனா பாதிப்பு.. பிசிசிஐ அவசர மீட்டிங்!!

மும்பை: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

32வது லீக் போட்டியில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொரோனா பரவலால் ஏற்கனவே இந்த போட்டியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

முதலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபெர்ஹாட்டிற்கு கொரோனா உறுதியானது. அதன்பின்னர் மசாஜ் தெரபிஸ்ட் - சேட்டன் குமார், அணி மருத்துவர் - அபிஜித் சல்வி,வீரர் மிட்செல் மார்ஷ், டிஜிட்டல் ஊழியர் ஆகாஷ் மானே என மொத்தமாக 5 பேருக்கு கொரோனா உறுதியானது.

பரிசோதனை முடிவுகள்

பரிசோதனை முடிவுகள்

இதன் பின்னர் அனைத்து வீரர்களுக்கும் கடந்த 5 நாட்களும் தொடர்ந்து பரிசோதனைகள் நடந்து வருகிறது. வீரர்கள் குவாரண்டைனில் இருந்ததால், புனேவில் நடைபெறவிருந்த டெல்லி - பஞ்சாப் அணி போட்டிகள் திடீரென மும்பை நகரத்திலேயே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பிரச்சினை என்ன

பிரச்சினை என்ன

இந்நிலையில் இவ்வளவு ஏற்பாடுகள் செய்தும் பிரச்சினை உருவாகியுள்ளது. டெல்லி அணியில் இன்று காலை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் மீண்டும் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Recommended Video

IPL 2022 : Mumbai Indians vs Chennai Super Kings Match | Oneindia Tamil
 பிசிசிஐ ஆலோசனை

பிசிசிஐ ஆலோசனை

இதனையடுத்து பிசிசிஐ அவசர அவசரமாக ஆலோசனைக்கூட்டம் நடத்தி வருகிறது. இன்று இரவு போட்டிக்கு முன்னதாக வீரர்களுக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் சிலருக்கு உறுதியானால், போட்டி ரத்து செய்யப்படும் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Wednesday, April 20, 2022, 17:14 [IST]
Other articles published on Apr 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+