Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் இறுதி போட்டி - குஜராத்தை பயமுறுத்தும் 4 ராஜஸ்தான் வீரர்கள்.. இவர்கள் கையில் தான் ஆட்டமே

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி பெற்றுள்ள ராஜஸ்தான் அணியும், முதல் கோப்பைக்காக போராடும் குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணியின் அடுத்த தலைமுறை கேப்டன்கள் யார் என்பதையும் இன்றைய ஆட்டம் தீர்மானிக்கும்.

ஆனால், இந்த ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும் 4 ராஜஸ்தான் அணி வீரர்கள் குறித்து தற்போது காணலாம்.

ஜாஸ் பட்லர்

ஜாஸ் பட்லர்

நடப்பு சீசனில் 823 ரன்கள் மற்றும் 4 சதம் விளாசியுள்ள பட்லர் கடைசியாக ஒரு முறை ஜொலிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை சதம் விளாசிய பட்லர் ஓய்வே இல்லாமல் ஞாயிற்றுக்கிழமையே போட்டியில் பங்கேற்பது அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. எனினும் நல்ல பார்மில் இருக்கும் பட்லர், இன்று அடித்தால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

இந்திய அணியில் இடம்பெறாத சஞ்சு சாம்சனுக்கு இது ஒரு கோல்டன் சான்ஸ். நல்ல பார்மில் இருந்தாலும் ஒரு பெரிய ஸ்கோர் அடிக்காமல் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்து வருகிறார். இன்றைய ஆட்டத்தில் அவர் சதம் அடித்தால் ராஜஸ்தான் அணிக்கு அது சாதகமாக அமையும். கடந்த 2 போட்டியிலும் சஞ்சு சாம்சன், அதிரடியாக விளையாடியதும், இன்றைய ஆட்டத்தில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

பிரசித் கிருஷ்ணா

பிரசித் கிருஷ்ணா

நடப்பு சீசனில் முதல் 7 போட்டியில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிரசித் கிருஷ்ணா, பிறகு கொஞ்சம் தடுமாறினார். முதல் குவாலிபையர் போட்டியின் இறுதி ஓவரில் பிரசித் கிருஷ்ணா ஓவரில் தான் 3 சிக்சர்கள் பறந்தது. எனினும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா ஃபார்ம்க்கு திரும்பி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்றைய ஆட்டத்திலும் குஜராத்துக்கு அவர் சிம்ம சொப்பனமாக இருக்கலாம்.

சாஹல்

சாஹல்

நடப்பு சீசனில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சாஹல், கடந்த 2 போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. மேலும் நரேந்திர மோடி மைதானம் கொஞ்சம் பெரியது என்பதால், சாஹல் பந்துவீச்சை தூக்கி அடித்து ஆட்டமிழக்க அதிக வாய்ப்புள்ளது. இன்றைய ஆட்டத்தில் சாஹல் மீண்டும் பார்ம்க்கு திரும்ப அதிக வாய்ப்புள்ளது. சாஹலின் செயல்பாடு தான் ராஜஸ்தான் அணியின் வெற்றியை தீர்மானிக்கும்.

Story first published: Sunday, May 29, 2022, 20:21 [IST]
Other articles published on May 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+