Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ரசிகர்கள் குழப்பம்.. வரலாற்றை நம்பினோருக்கு பின்னடைவு..இறுதிப்போட்டியில் இருக்கும் சுவாரஸ்யம்

ஐபிஎல் இறுதிப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கணிப்பில் ரசிகர்களுக்கு புது குழப்பம் உண்டாகியுள்ளது.

ஐபிஎல் 15வது சீசனின் இறுதிப்போட்டியில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

அகமதாபாத் மோதிரா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

ஐபிஎல் இறுதிப்போட்டி

ஐபிஎல் இறுதிப்போட்டி

அறிமுக தொடரிலேயே இறுதிப்போட்டி வரை வந்துள்ள குஜராத் அணி கோப்பையையும் வெல்ல வேண்டும் எனத் தீவிரமாக உள்ளது. மற்றொருபுறம் 2008ம் ஆண்டுக்கு பிறகு 2வது கோப்பையை வெல்ல ராஜஸ்தான் அணி முனைப்புடன் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளது.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

இந்நிலையில் அதில் தான் புது குழப்பம் உருவாகியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடந்த 14 இறுதிப்போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்தவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர். முதலில் பேட்டிங் செய்தவர்கள் 9 முறையும், 2வது பேட்டிங் செய்தவர்கள் 5 முறையும் வெற்றி கண்டுள்ளனர். பிட்ச்- நிலைமையையும் தாண்டி மனநிலையை பொறுத்து தான் இந்த வெற்றிகள் பெறப்பட்டுள்ளன.

ஐபிஎல் வரலாறு

ஐபிஎல் வரலாறு

அதாவது மிக முக்கிய போட்டிகளில் அழுத்தம் அதிகம் இருக்கும். குறைந்த இலக்காக கூட இருந்தாலும், அழுத்தத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியாது. இதனால் தான் முதலில் பேட் செய்து நல்ல இலக்கை நிர்ணயிக்க விரும்புகின்றனர். ஆனால் இன்றைய போட்டியில் அப்படி செய்தால் தோல்வி தான் மிஞ்சும் எனத் தெரிகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

அகமதாபாத் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வது கடினமான ஒன்றாக உள்ளது. பந்தை கணிக்க முடியவில்லை. இதனால் தான் 2வது குவாலிஃபையரில் ஆரிசிபி மோசமாக தோற்றது. இந்த மைதானத்தில் டாஸ் வென்றாலும் 2வதாக பேட்டிங் செய்தால் மட்டுமே வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. குவாலிஃபையர் ஒன்றிலும் ராஜஸ்தானை சேஸிங்கில் தான் குஜராத் அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது

Story first published: Sunday, May 29, 2022, 20:08 [IST]
Other articles published on May 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+