Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் கோப்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.. ராஜஸ்தான் அணி சாய்ந்தது எப்படி.. முழு விவரம்!

அகமதாபாத்: ஐபிஎல் 15வது சீசனின் சாம்பியன் பட்டம் வென்று குஜராத் டைட்டன்ஸ் அணி அசத்தியுள்ளது.

Recommended Video

IPL 2022 Gujarat Titans கோப்பையை வென்றது வீரர்கள் மகிழ்ச்சி | #Cricket

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதிரடி ஓப்பனிங்

அதிரடி ஓப்பனிங்

டாஸில் வெற்றி பெற்ற போதும், ராஜஸ்தான் அணியால் பேட்டிங்கில் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. தொடக்க வீரர்கள் யாஷஸ்வின் ஜெய்ஷ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் அதிரடி தொடக்கம் தந்தனர். எனினும் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.ஜெய்ஷ்வால் 22 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மிடில் ஆர்டர் சொதப்பல்

மிடில் ஆர்டர் சொதப்பல்

இதன் பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்கள், தேவ்தத் பட்டிக்கல் 2 ரன்கள், ஹெட்மெயர் 11 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர். மறுமுணையில் ஒற்றையாளாக போராடி வந்த ஜாஸ் பட்லரும் 39 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 130 ரன்களை மட்டுமே எடுத்தது.

 கேப்டன்கள் இன்னிங்ஸ்

கேப்டன்கள் இன்னிங்ஸ்

குஜராத் அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 4 ஓவர்களை வீசி 17 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். துணைக்கேப்டன் ரஷித் கான் 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை சாய்த்தார்.

ஓப்பனிங் அதிர்ச்சி

ஓப்பனிங் அதிர்ச்சி

சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர் விருதிமான் சாஹா 5 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இதன் பின்னர் வந்த மேத்யூவ் வேட் 8 ரன்களுக்கு நடையை கட்டினார். எனினும் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தியது.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 30 பந்துகளில் 34 ரன்களை குவித்து வெளியேறினார். பின்னர் வந்த டேவிட் மில்லர் 19 பந்துகளில் 32 ரன்களை விளாச குஜராத் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்களை குவித்தது. தொடக்க வீரர் சுப்மன் கில் 43 பந்துகளில் 45 ரன்களை அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல்-ல் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

Story first published: Monday, May 30, 2022, 11:36 [IST]
Other articles published on May 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+