For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் இறுதிப் போட்டி - டிவிட்டரில் டிரெண்ட் ஆகும் "ஃபிக்சிங்" டேக்.. ஜெய்ஷா செய்த தவறு

அகமதாபாத்: ஐபிஎல் 15வது சீசன் சாம்பியன் பட்டத்தை குஜராத் டைட்டன்ஸ் அணி வென்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் ஃபிக்சிங் என்ற வார்த்தை டிரெண்ட் ஆகி வருகிறது.

Recommended Video

IPL 2022 Award Winners: அசத்திய Butler, Dinesh Karthik | Aanee's Appeal | #Cricket

புதிய அணியான குஜராத்தும், 14 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு வந்துள்ள ராஜஸ்தான் அணியும் நேற்று மோதின.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்யாமல், பேட்டிங்கை எடுத்ததும் ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன டா..? எனக்கு வச்சிருந்த மாலைய டீம்க்கு போட்ருக்கீங்க.. வார்னே கேட்பது போல் ஐபிஎல் மீம்ஸ்என்ன டா..? எனக்கு வச்சிருந்த மாலைய டீம்க்கு போட்ருக்கீங்க.. வார்னே கேட்பது போல் ஐபிஎல் மீம்ஸ்

சொந்த மாநிலம்

சொந்த மாநிலம்

இந்த நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால் தான், குஜராத் அணி வெற்றி பெற வைக்கப்பட்டதாக ரசிகர்கள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் சிலர், பிரதமர் மோடி, அமித்ஷாவின் புகைப்படத்தை போட்டு குஜராத் அணிக்கு வாழ்த்துக்கள் என்று கூறி வருகின்றனர்.

நியாயமாக இல்லை

நியாயமாக இல்லை

மற்றொரு ரசிகர், ஐபிஎல் போட்டி நியாயமாக நடைபெறவில்லை என்றும், அப்படி நடந்து இருந்தால் பெங்களூரு அணி தான் கோப்பையை வென்று இருக்கும் என்று பதிவிட்டு இருந்தார். இன்னொரு ரசிகர் குஜராத்தை சேர்ந்தவர்கள், பதவியில் இருக்கும் போது பெங்களூரு எப்படி ஜெய்க்கும் என்றும் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

ஜெய்ஷா கொண்டாட்டம்

ஜெய்ஷா கொண்டாட்டம்

இதே போன்று மற்றொரு ரசிகர், பிசிசிஐ நிர்வாகத்தில் இருக்கும் நபர்கள், எந்த அணிக்கும் சாதகமாக இல்லாமல் நடுநிலையாக தான் செயல்பட வேண்டும். ஆனால் நேற்று குஜராத் ரன்கள் அடிக்கும் போதும், விக்கெட் எடுக்கும் போதும் ஜெய்ஷா கைத்தட்டி கொண்டாடுவது, ஒரு தலைப்பட்சமான நடவடிக்கை கிடையாதா? அப்படி நடந்தால் அது எப்படி நியாயமாக இருக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒருதலைப்பட்சம்

ஒருதலைப்பட்சம்

ஐபிஎல் தொடர் என்றால் ஃபிக்சிங் நடைபெறும் என்று ரசிகர்கள் மனதில் சில சம்பவங்கள் காரணமாக பதிந்து விட்டது. இதனை மாற்றும் பொறுப்பு பிசிசிஐ கையில் தான் உள்ளது. ஆனால் பிசிசிஐ நிர்வாகிகளோ, ஒரு அணிக்கு சார்பாக கைத் தட்டினால் இது போன்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழத்தான் செய்யும்.

Story first published: Monday, May 30, 2022, 18:16 [IST]
Other articles published on May 30, 2022
English summary
IPL 2022 – Fixing Tag is trending in twitter after Gujarat win ஐபிஎல் இறுதிப் போட்டி - டிவிட்டரில் டிரெண்ட் ஆகும் "ஃபிக்சிங்" டேக்.. ஜெய்ஷா செய்த தவறு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X