கம்பீர் போட்ட ஒரு வரி கேப்ஷன்.. அதுவும் தோனிக்காக.. வாயடைத்துப்போன ரசிகர்கள்.. இப்படி ஒரு நெருக்கமா!
மும்பை: எம்.எஸ்.தோனியை சந்தித்தது குறித்து கவுதம் கம்பீர் பதிவிட்டுள்ள கருத்து ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
இதில் லக்னோ அணி 4 விக்கெட் இழப்புக்கு லக்னோ அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.

சிஎஸ்கேவின் தோல்வி
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 50 ரன்களும், சிவம் துபே 49 ரன்களும் விளாசினர். இதனை அடுத்து பேட்டிங் செய்த லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை எடுத்தது.

சுவாரஸ்ய சம்பவம்
இந்த போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்ததை விட, போடிக்கு பின்னர் நடந்த விஷயம் தான் அதிக கவனம் பெற்றது. அதாவது போட்டி முடிந்த பின் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் லக்னோ அணியின் ஆலோகர் கவுதம் கம்பீரும் சந்தித்து பேசிக் கொண்டனர். இருவரும் சிரித்துக்கொண்டே பேசிய புகைப்படம் இணையத்தை ஆக்கிரமித்தது.

கம்பீரின் பதிவு
இந்நிலையில் அந்த புகைப்படத்தை கம்பீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு போடப்பட்டுள்ள கேப்சனில் 'மீண்டும் கேப்டனை சந்தித்ததில் மகிழ்ச்சி' என பதிவிட்டுள்ளார். இத்தனை வருடங்கள் பரவி வந்த ஒட்டுமொத்த விமர்சனங்களுக்கும் இந்த ஒரு வரி பதிலடி கொடுத்துவிட்டது.

இருவருக்குமான பிரச்சினை
எம்.எஸ்.தோனியின் தலைமையில் 2007ம் ஆண்டு மற்றும் 2011ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்தியா அணியில் இருந்தவர் கம்பீர். சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஆனால் கம்பீருக்கும் தோனிக்கும் இடையே நீண்ட வருடமாக கருத்து வேறுபாடு இருப்பதாகவும், தோனிக்கு கிடைத்த புகழை பார்த்து கம்பீர் பொறாமை பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தனர். அதற்கு தற்போது முடிவுக்கட்டப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications