For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி மீது கம்பீர் மறைமுக தாக்கு.. என்ன என்ன சொல்றாரு பாருங்க..தோனிக்கு பேட்டிங் வராதா?

மும்பை: தோனி என்னுடைய நண்பர் என்று கூறி 48 மணி நேரம் கூட ஆகவில்லை, அதற்குள் மீண்டும் அவரை வம்பிழுக்கும் வகையில் பேசியுள்ளார் கம்பீர்.

டெல்டில எம்.பி.யாக உள்ள கம்பீர், தற்போது மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார். லக்னோ அணியின் மெண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் எப்படி துணை நின்றாரோ, அதே போல் கே.எல். ராகுலுக்கு கம்பீர் வழிக்காட்டியாக உள்ளார்.

கேப்டன்

கேப்டன்

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கம்பீர், ஒரு தலைவன் தான் அணியை களத்திலும், களத்துக்கு வெளியேவும் வழிநடத்த வேண்டும். ஆனால் என்னை பொறுத்தவரை ராகுல் கேப்டனாக மட்டும் இருக்க கூடாது, பேட்ஸ்மேனாகவும் அணிக்கு செயல்பட வேண்டும். இதை தான் நான் அவருக்கு புரிய வைக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

முழு சுதந்திரம்

முழு சுதந்திரம்

ஒரு கேப்டன் எப்போதும் ரிஸ்க் எடுக்க வேண்டும். ரிஸ்க் எடுத்தால் தான் வெற்றி பெற்றோமா, அது பலன் அளித்ததா என்று தெரியும். இம்முறை விக்கெட் கீப்பராக குயின்டன் டி காக் தான் செயல்படுவார். இதனால் ராகுலுக்கு நெருக்கடி இருக்காது. அவர் ரிஸ்க் எடுக்க அணி நிர்வாகம் சார்பில் முழு சுதந்திரம் கிடைக்கும்.

எதிர்கால கேப்டன்

எதிர்கால கேப்டன்

இதே போன்று இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஐபிஎல் மூலம் கண்டறியப்படும் என்ற கூற்றையும் கம்பீர் மறுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணி கேப்டன் பதவி கிடைக்கும் என்று எந்த உறுதியும் கிடையாது. இந்தியாவின் எதிர்கால கேப்டன் என்பதற்கும், கேப்டனாக நியமிக்கப்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது. அதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

Recommended Video

IPL 2022-ல் Batting Order-ஐ மாற்ற போகும் Dhoni? இதான் காரணம்
தோனி மீது தாக்கு

தோனி மீது தாக்கு

இது ராகுலுக்கு கொடுத்த அறிவுரையா இல்லை தோனிக்கு கொடுக்கும் அறிவுரையா என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் தோனி கடந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் சொதப்பினார். வெறும் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக மட்டும் அணியில் தொடர்ந்தார். இதனை மனதில் வைத்து தான் கம்பீர் இப்படி கூறுகிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Wednesday, March 23, 2022, 10:16 [IST]
Other articles published on Mar 23, 2022
English summary
IPL 2022- Gautam Gambhir again cornered MS Dhoni for batting skills தோனி மீது கம்பீர் மறைமுக தாக்கு.. என்ன என்ன சொல்றாரு பாருங்க..தோனிக்கு பேட்டிங் வராதா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+