Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் போட்டியில் லவ் சீன்.. பையனை கரெக்ட் பண்ண பொண்ணு.. போட்டிக்கு நடுவே காதல் பரிமாற்றம்

புனே: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே, பெங்களூரு அணிக்கு இடையிலான போட்யின் போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தது.

Recommended Video

RCB Fanக்கு Propose செய்த Girl! CSK Match-ல் ஒரு Love Story | OneIndia Tamil

புனேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீசியது. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 173 ரன்கள் எடுத்தது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கேக்கு எத்தனை ரசிகர்கள் இருந்தார்களோ, அதே அளவுக்கு மைதானத்தில் ஆர்சிபி ரசிகர்களும் இருந்தனர்.

மைதானத்தில் காதல் ஜோடிகள் தங்களது காதலை தெரிவிப்பது முதல் ரசிகர்கள் சிலர் எச்சியை துப்புவது உள்ளிட்ட அனைத்து விசயங்களும் கிரிக்கெட் போட்டியில் நடக்கும். ரசிகர்களை விடுங்கள், கடந்த சிசனில் சிஎஸ்கே வீரர் தீபக் சாஹரே இப்படி தான் தன் காதலை தோழிக்கு தெரிவித்தார்.

IPL 2022- Girl Proposed to Boy During CSK vs RCB Match

ஆனால் முதல் முறையாக ஒரு வித்தியாசமான சீன் ஐபில் போட்டியில் அரங்கேறியது. சிஎஸ்கே அணி வெற்றிக்காக போராட, அதனை ஆர்சிபி தடுத்து நிற்க, இரு அணிகளும் கடுமையாக போராடினர். ஆனால், மைதானத்தில் பார்வையாளர்களில் ஒரு ஜோடி செய்த சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எப்போதும் பையன் தானே, காதலிக்கு ஒரு கால் முட்டி போட்டு மோதிரத்தை வழங்கி காதலை தெரிவிப்பார். இன்று, ஒரு பெண் திடீரென்று ஒரு கால் முட்டி போட்டு மோதிரத்தை நீட்டி தனது ஆண் நண்பருக்கு காதலை தெரிவித்தார். இதனை கொஞ்சமும் எதிர்பாராத அந்த பையன், அதற்கு யெஸ் என்று கூறி காதலை ஏற்று கொண்டார். இதனை மற்ற பார்வையாளர்களும் கொண்டாடினர். நல்ல வேலையாக மைதானத்தில் ஆரஞ்ச் ஆர்மி இல்லாததால் அந்த காதல் ஜோடி தப்பியது.

Story first published: Wednesday, May 4, 2022, 22:51 [IST]
Other articles published on May 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+