
மும்பை மாற்றங்கள்
மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்துள்ளதால், இந்த முறையாவது முதல் வெற்றியை பெற வேண்டும் என்ற முணைப்புடன் உள்ளது. இதற்காக 2 முக்கிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. கடந்த போட்டியில் ஒரே ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கிய டேனியல் சாம்ஸுக்கு பதிலாக ராமந்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல வேகப்பந்துவீச்சாளர் டைமல் மில்ஸுக்கு பதிலாக ஜெய்தேவ் உனத்கட் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேக்ஸ்வெல் கம்பேக்
3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று பலமாக உள்ள ஆர்சிபி அணியிலும் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அணியின் அதிரடி நாயகனான க்ளென் மேக்ஸ்வெல் இன்று முதல் போட்டியில் விளையாடுகிறார். ரூதர்ஃபோர்ட் நீக்கப்பட்டுள்ளார். டாப் ஆர்டரில் டூப்ளசிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் என்ற வரிசை மும்பைக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கப்போகிறது.

முடிவு சரிதானா?
புனே களத்தை பொறுத்தவரையில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவக்கூடிய ஒன்றாக உள்ளது. அதுவும் நன்கு பவுன்ஸாகிறது. இங்கு முதலில் பேட்டிங் செய்யக்கூடிய அணிக்கூட வெற்றி பெறலாம். ஆனால் பனிப்பொழிவு காரணமாக ஆர்சிபி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

ப்ளேயிங் 11 விவரம்
மும்பை: ரோகித் சர்மா, இஷான் கிஷான், டேவால்ட் பிரேவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கெயீரன் பொல்லார்ட், ராமந்தீப் சிங், முருகன் அஸ்வின், ஜெய்தேவ் உனத்கட், ஜஸ்பிரித் பும்ரா, பாசில் தாம்பி
ஆர்சிபி அணி: டூப்ளசிஸ், அனுஜ் ராவத், விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், சபாஷ் அகமது, தினேஷ் கார்த்திக், டேவிட் வில்லி, வானிண்டு ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்


Click it and Unblock the Notifications











