Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓ..இதுதான் காரணமா.. சிஎஸ்கே - மும்பை ஏன் பிரிந்தது?.. எதன் அடிப்படையில் குரூப் தேர்வு செய்யப்பட்டது?

மும்பை: முக்கியமான தகுதிகளை அடிப்படையாக கொண்டு தான் ஐபிஎல் குரூப்கள் பிரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தேதிகள், மைதானங்கள் குறித்த முக்கிய அப்டேட்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வரும் மார்ச்26ம் தேதி போட்டிகள் தொடங்கி, மே 29ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறவிருக்கிறது.

குரூப் ஃபார்மட்

குரூப் ஃபார்மட்

இந்த முறை 10 அணிகள் விளையாடுவதால் 2 குரூப்களாக பிரிக்கப்பட்டு விளையாடவுள்ளன. ஏ, பி என ஒவ்வொரு குரூப்களிலும் தலா 5 அணிகள் இடம்பெறும். அதில் ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதிக்கொள்ளும். அதன் பின்னர் மற்றொரு குரூப்பில் உள்ள 5 அணிகளில் ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோதும். மற்ற 4 அணிகளுடனும் தலா ஒரே ஒரு முறை மட்டும் மோதிக்கொள்ளும்.

பரம எதிரிகள்

பரம எதிரிகள்

இதில் பரம் எதிரிகளாக ரசிகர்களால் பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏ குரூப்பிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் பி குரூப்பிலும் இடம்பெற்றுள்ளன. வெவ்வேறு குரூப்களில் இருந்தாலும் 2 முறை மோதிக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் எதன் அடிப்படையில் இந்த குரூப்கள் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன தகுதிகள்

என்னென்ன தகுதிகள்

அதாவது இதுவரை ஐபிஎல் தொடரில் கோப்பைகளை வென்றவை, இறுதிப்போட்டி, அரையிறுதிப்போட்டி என அதிக முறை சென்றவை ஆகியவற்றை அடிப்படை தகுதிகளாக கொண்டு குரூப்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் புதிதாக வந்துள்ள 2 அணிகளும் ஒவ்வொரு அணியில் பொதுவான முறையில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

Recommended Video

IPL 2022: CSK and captain MS Dhoni are in upset, after BCCI makes a bold decision | Oneindia Tamil
புள்ளிவிவரங்கள்

புள்ளிவிவரங்கள்

அப்படி பார்த்தால் 5 முறை கோப்பை வென்ற மும்பை ஏ அணியிலும், 4 முறை கோப்பை வென்ற சிஎஸ்கே பி அணியிலும் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் 2 முறை கோப்பை வென்ற கொல்கத்தா ஒரு முறை கோப்பை வென்ற ஐதராபாத் வெவ்வேறு அணிகளுக்கு சென்றது. கடைசியாக ராஜஸ்தான் ஒரே ஒரு கோப்பையுடன் குரூப் ஏ பிரிவுக்கு சென்றது. மற்ற அணிகள் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை.

Story first published: Friday, February 25, 2022, 19:52 [IST]
Other articles published on Feb 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+