Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி சாதனையை நிகழ்த்தி அசத்தல்.. 25 லட்சத்தில் திவாட்டியாவை மிஸ் பண்ண சிஎஸ்கே.. கிண்டலுக்கு பதிலடி

மும்பை: ஐபிஎல் வரலாற்றில் தோனி மட்டுமே செய்த சாதனையை குஜராத் அணியில் விளையாடும் ராகுல் திவாட்டியா படைத்து அசத்தியுள்ளார்.

ராகுல் திவாட்டியா என்ற பெயரை நாம் 2020 ஆண்டு முதல் தான் நாம் கேள்வி பட்டு இருப்போம். ஆனால் அவர் 2014ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ராகுல் திவாட்டியா 2014ஆம் ஆண்டே ராஜஸ்தான் அணிக்காக விளையாடி இருக்கிறார்.

அதிக கேட்ச்

அதிக கேட்ச்

ஆனால் அப்போது அவருக்கு அங்கு ஒன்றும், இங்கு ஒன்றுமாக தான் விளையாட வாய்ப்பு கிடைத்தது. 2017ஆம் ஆண்டு பஞ்சாப், 2018ஆம் ஆண்டு டெல்லிக்கு விளையாடிய ராகுல் திவாட்டியா, அப்போது ஒரே இன்னிங்சில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பராக இல்லாத வீரர் என்ற பெருமையை ராகுல் திவாட்டியா படைத்தார்.

5 சிக்சர்

5 சிக்சர்

ராகுல் திவாட்டியா புகழ் உச்சிக்கு சென்று 2020ஆம் ஆண்டு சீசனில் தான். பஞ்சாப்க்கு எதிராக 224 ரன்கள் சேஸ் செய்யும் போது, திவாட்டியா ஒரே ஓவரில் 5 சிக்சர் விளாசி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். அந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கியதால் 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

சிஎஸ்கே மிஸ்

சிஎஸ்கே மிஸ்

ஆனால் ராகுல் திவாட்டியா 2021ஆம் ஆண்டு சீசனில் சரிவர விளையாடவில்லை. இந்த நிலையில் மெகா ஏலத்தில் ராகுல் திவாட்டியாவை எடுக்க சிஎஸ்கே அணியும், குஜராத் அணியும் கடுமையாக போட்டி போட்டது. திவாட்டியாவுக்காக சிஎஸ்கே அணி 8.75 கோடி வரை ஏலத்தில் கேட்க, குஜராத் அணி 9 கோடிக்கு அவரை வாங்கியது. அப்போது ராகுல் திவாட்டியாவுக்கு இவ்வளவு ரூபாய் கொடுக்க சிஎஸ்கே முன்வந்ததற்கு ரசிகர்கள் கேலி கிண்டல் செய்தனர்.

தோனி சாதனை சமன்

தோனி சாதனை சமன்

ஆனால், 2 பந்துக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட போது கடைசியில் 2 சிக்சர் விளாசி அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார் ராகுல் திவாட்டியா. கடந்த 2016 ஆம் ஆண்டு புனே அணிக்காக தோனி விளையாடிய போது, பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அக்சர் பட்டேல் வீசிய ஓவரில் தோனி கடைசி 2 பந்தில் 2 சிக்சர் விளாசி சாதனை படைத்தார். தற்போது அதனை திவாட்டியாவும் செய்துள்ளதால் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Saturday, April 9, 2022, 13:16 [IST]
Other articles published on Apr 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+