Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராயல்ஸ்க்கு எதிராக சாமி ஆடிய ஹர்திக்..மில்லரின் கில்லரான ஆட்டம்.. இமாலய இலக்கை எட்டிய குஜராத்

மும்பை: ஐபிஎல் தொடரின் 24வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி இமாலய இலக்கை எட்டியது.

நவி மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது.

குஜராத் அணியில் சாய் சுதர்சன் அதிரடியாக நீக்கப்பட்டு, விஜய் சங்கர் நியமிக்கப்பட்டார். இத்ற்கு ஹர்திக் பாண்டியா மீது கடும் விமர்சனம் எழுந்தது.

தடுமாறிய குஜராத்

தடுமாறிய குஜராத்

இதனையடுத்து பெரிய இலக்கை எட்ட வேண்டிய நெருக்கடியில் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய மேத்தீவ் வெட் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதே போன்று சுப்மான் கில்லும் 13 ரன்களுக்கு வெளியேற, விஜய் சங்கர் 2 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் குஜராத் அணி 53 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.

அபினவ் அசத்தல்

அபினவ் அசத்தல்

இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், அபினவ் மனோகரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். அபினவ் மனோகர் 28 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். மறுமுனையில் ஹர்திக் பாண்டியா தனது வழக்கமான அதிரடியை வெளிக்காட்டினார்.

ஹர்திக் அபாரம்

ஹர்திக் அபாரம்

ஹர்திக் பாண்டியா நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டினார். 33 பந்துகளில் அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா, மீண்டும் ராஜஸ்தான் பந்துவீச்சை ஒரு கை பார்த்தார். 4 சிக்சர், 8 பவுண்டரிகளை விளாசிய ஹ்ர்திக் பாண்டியா 52 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார்.

193 ரன்கள் இலக்கு

193 ரன்கள் இலக்கு

இறுதியில் டேவிட் மில்லர் தனது பழைய ஃபார்மை மீண்டும் வெளிகாட்டினார். 14 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகளும், ஒரு சிக்சர் அடங்கும். இதனால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் பந்துவீச்சாளர் குல்தீப் சென் 4 ஓவரில் 51 ரன்கள் விட்டு கொடுத்தார்.

Story first published: Thursday, April 14, 2022, 21:39 [IST]
Other articles published on Apr 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+