Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிக்கலில் குஜராத் அணி.. ஹர்திக் பாண்ட்யா போட்ட உத்தரவு..ப்ளே ஆஃப் சுற்றை தீர்மானிக்கும் முதல் போட்டி

மும்பை: ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றை தீர்மானிக்கக்கூடிய முதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இன்று புனேவில் நடைபெறும் 57வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன.

புதிதாக வந்துள்ள இந்த 2 அணிகளும் தான் டேபிள் டாப்பில் உள்ளனர். இவர்கள் இன்று மிக முக்கிய போட்டியில் மோதுகின்றனர்.

முக்கியமான போட்டி

முக்கியமான போட்டி

இரு அணிகளுமே தற்போது வரை 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் உள்ளன. ரன்ரேட் அடிப்படையில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலும் குஜராத் அணி 2வது இடத்தில் இருந்து வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி தான் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெறும்.

லக்னோ அணி

லக்னோ அணி

லக்னோ அணியை பொறுத்தவரையில் கடந்த 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றியை மட்டுமே கண்டு நம்பிக்கையுடன் உள்ளது. கேப்டன் கே.எல்.ராகுல் அந்த அணியின் தூணாக இருக்கிறார். இதுவரை 11 போட்டிகளில் 451 ரன்களை குவித்து, தொடரின் 2வது அதிகபட்ச ஸ்கோரை வைத்துள்ளார். இவரை தவிர்த்து டிக்காக், தீபக் ஹூடா ஆகியோர் நல்ல பேட்டிங் ஃபார்மில் உள்ளனர்.

பலமான பவுலிங்

பலமான பவுலிங்

பந்துவீச்சை பொறுத்தவரையில் பஞ்சாப் அணியுடன் 153 ரன்களை கூட லக்னோ டிஃபண்ட் செய்தது. இதே போல கொல்கத்தாவை 101 ரன்களுக்கு சுருட்டியது. ஆவேஷ் கான், ஜேசன் ஹோல்டர், மோஷின் கான், துஷ்மந்தா சமீரா, க்ருணால் பாண்ட்யா, ரவி பிஷ்னாய் என பெரும் படையை வைத்துள்ளது.

சிக்கலில் குஜராத்

சிக்கலில் குஜராத்

மற்றொரு புறம் குஜராத் அணி சிக்கலில் மாட்டியுள்ளது. தொடக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டு வந்த அந்த அணி கடந்த சில போட்டிகளில் சொதப்பி வருகிறது. குறிப்பாக அணியின் மிடில் ஆர்டரில் ஒருவர் கூட நிலைப்பதில்லை. கடைசியாக ஆடிய 2 போட்டிகளிலும் மோசமான தோல்வி பெற்றுள்ளதால், கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பாண்ட்யாவின் உத்தரவு

பாண்ட்யாவின் உத்தரவு

ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் தேவட்டியா போன்ற வீரர்கள் பேட்டிங்கில் மோசமான ஷாட்களால் விக்கெட்டை பறிகொடுக்கின்றனர். எனவே இன்று அவர்களது பழைய ஃபார்மை காட்ட வேண்டும் என அணி ஆலோசனைக்கூட்டத்தில் கராராக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Story first published: Tuesday, May 10, 2022, 16:45 [IST]
Other articles published on May 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+