
ஜெயவர்த்தனே பளீச்
அதன் பிறகு மற்ற அணிகளின் தயவு இருந்தால் பிளே ஆப் வாய்ப்பை எதிர்பார்க்கலாம். ஆனால், அதை பற்றி எல்லாம் நாங்கள் யோசிக்கவே இல்லை என்கிறார் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே. இந்த சீசனை வெற்றிக்கரமாக முடிக்க பார்க்கிறோம். எங்கள் அணியின் பந்துவீச்சு பலவீனமாக உள்ளது.

பிரச்சினையே இது தான்
18வது ஓவர் வரை சிறப்பாக வீசுகிறோம். அதன் பின்னர் 20 ரன்களுக்கு மேல் ஒரு ஓவரில் விட்டு தருகிறோம். இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜெயவர்த்தனே கூறினார். இதனை தான் மற்ற அணியும் செய்கிறது. பும்ராவை தவிர மற்ற யாரும் நெருக்கடி தரும் வகையில் பந்துவீசுவதில்லை.

பும்ரா மேஜிக்
இதனால் மற்ற அணி பேட்ஸ்மேன்கள், பும்ரா ஓவரை அமைதியாக எதிர்கொண்டு மற்ற பந்துவீச்சுளர்களை ஒரு கை பார்க்கின்றனர். மும்பை அணி 8 போட்டிக்கு பிறகு வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றியை தக்க வைக்க மும்பை போராடும். ரஷித் கானுக்கு எதிராக இஷான் கிஷன் நன்றாக விளையாடி இருக்கிறார். 51 பந்துகளை எதிர்கொண்டு 64 ரன்களை அடித்துள்ளார். இதில் ஒரு முறை கூட அவுட்டாகவில்லை.

ரஷித் Vs இஷான் கிஷன்
ரஷித் கான், 7 ஓவரிலிருந்து 15வது ஓவர் வரை 71 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் அவரை எதிர்கொள்ள கிஷனை மிடில் ஆர்டரில் இறக்கிவிடுவது நல்லது. இந்த நிலையில், கடந்த சில போட்டிகளாக சுப்மான் கில் , ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் சொதப்புவது குஜராத் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதே போன்று கடந்த போட்டியில் குஜராத் அணியில் அரைசதம் விளாசிய சாய் சுதர்சன், காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் இன்றைய போட்டியில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாக உள்ளது.


Click it and Unblock the Notifications