Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன டா..? எனக்கு வச்சிருந்த மாலைய டீம்க்கு போட்ருக்கீங்க.. வார்னே கேட்பது போல் ஐபிஎல் மீம்ஸ்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை குஜராத் அணி முதல் முறையாக வென்றது. 14 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வெல்லும் வாய்ப்பு ராஜஸ்தானுக்கு பறிப்போனது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி செய்த தவறுகளை விமர்சித்து ரசிகர்கள் வழக்கம் போல் மீம்ஸ் தயாரித்துள்ளனர்.

அதே சமயம், பிரம்மாண்டமாக நடைபெற்ற மைதானத்தில், நட்சத்திர அணிகள் இல்லாததும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

வடிவேலுவாக மாறிய வார்னே

வடிவேலுவாக மாறிய வார்னே

ராஜஸ்தான் அணி 14 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்று, மறைந்த வார்னேவுக்கு அஞ்சலி செலுத்தப் போகிறோம் என்று அறிவித்திருந்தது. ஆனால், போட்டி தொடங்கிய சில நேரத்திலேயே ராஜஸ்தான் தோல்வியை நோக்கி சென்றது. இதனை கிண்டலடிக்கும் வகையில், வார்னே கேட்பது போல் என்ன டா, எனக்கு போட வச்சிருந்த மாலைய டீம்க்கு போட்டு வச்சிருக்கிங்க என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ் மீம்ஸ்

கீர்த்தி சுரேஷ் மீம்ஸ்

ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது தான் என்று கூறப்படுகிறது. இதனை கலாய்க்கும் வகையில், அண்ணாத்தே படத்தில் கீர்த்தி சுரேஷ் உங்களை யார் அடிச்சது என்று கேட்பாரே, அந்த சீனை போட்டு, குஜராத் சேஸிங்கில் தான் அதிக முறை வென்று இருக்கிறது என்று தெரிந்தும். ஏன் பேட்டிங்க முதலில் எடுத்த, சொல்லு சஞ்சு என்று கீர்த்தி கேட்பது போல் ரசிகர்கள் தங்களது மனக்குறையை கேட்டுள்ளனர்.

கில்லி மீம்ஸ்

கில்லி மீம்ஸ்

நேற்றையை பைனல் உப்பு சப்பு இல்லாமல் ரொம்ப மொக்கையாக இருந்தது. 1 லட்சம் பேர் கூடியும் ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லாமல் இருந்தது. இதற்கு காரணம் சிஎஸ்கே, மும்பை போன்ற நட்சத்திர அணிகள் இல்லாதது தான் என்று கருதப்படுகிறது. இதை வைத்து கில்லி படத்தில் கேப்டன் வேலு இல்ல அதுனால் தான் மேட்ச் வெஸ்டா இருக்கு என்று சீனை போட்டு , சிஎஸ்கே, மும்பை இல்லாததால் மேட்ச் மொக்கையாகி விட்டதாக மீம்ஸ் போட்டுள்ளனர்.

சங்கக்காரா மீம்ஸ்

சங்கக்காரா மீம்ஸ்

ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியின் சுப்மான் கில் சிக்சர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார். இதனை சங்ககாரா எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என்று சொல்வது போல் மீம்ஸ் போட்டுள்ளனர். தெரியலையே, நம்ம தோனி இதே மாதிரி சிக்சர் அடித்து தானே இலங்கை அணியை உலககோப்பையில் வீழ்த்தினார், அதை தான் போட்டு இருக்காங்க.

Recommended Video

GT-யின் Unsung duo Nehra, Kirsten! 2011 WC முதல் IPL 2022 வரை | Aanee's Appeal | #Cricket
ரவி சாஸ்த்ரி சுடிதார்?

ரவி சாஸ்த்ரி சுடிதார்?

இதே போன்று ரவி சாஸ்த்ரி பல ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் வர்ணனையாளர் பொறுப்புக்கு வந்தார். ரவி சாஸ்த்ரி அணிந்திருந்த ஆடையை கலாய்க்கும் வகையில், நீங்க போட்டு இருக்க சுடிதார் நல்லா இருக்கு மாமா என்று மீம்ஸ் போட்டுள்ளனர். இன்னொரு மீமில், மும்பை, சிஎஸ்கே அணி இத்தகைய பெரிய மைதானத்தில் நாம் இல்லையே என்று வருத்தப்படுவது போல் மீம்ஸ் போட்டுள்ளனர்.

Story first published: Monday, May 30, 2022, 13:07 [IST]
Other articles published on May 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+