ரெய்னாவை அசிங்கப்படுத்திய குஜராத் அணி.. இருந்தாலும் அந்த வார்த்தை சொல்லக்கூடாது.. கொதித்த ரசிகர்கள்!
மும்பை: சுரேஷ் ரெய்னா குஜராத் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளது.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி மே 29ல் நடைபெறுகிறது.
இதற்கான அட்டவணை பணிகள் நடந்து வந்த சூழலில் தான் குஜராத் அணியில் குழப்பம் உருவானது.

குஜராத் அணியில் ரெய்னா
குஜராத் அணியின் தொடக்க வீரராக களமிறங்கவிருந்த இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பயோ பபுள் காரணமாக வெளியேறுவதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரின் இடத்தில் தான் சுரேஷ் ரெய்னா சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. தொடக்க வீரராக மேத்யூவ் வேட்டை களமிறக்கிவிட்டு, மிடில் ஆர்டரில் ரெய்னா விளையாடுவார் என தகவல்கள் வெளியாகின.

ரசிகர்கள் கொண்டாட்டம்
இதனையடுத்து கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் ரெய்னாவின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். ரெய்னாவின் பெயரில் ஹேஷ்டேக்களும், சிஎஸ்கேவுக்கு பதிலடி என்றும் ட்ரெண்ட் செய்து வந்தனர். ஆனால் தற்போது அவை அனைத்திற்கும் பெரும் இடி வந்து இறங்கியுள்ளது.

நிர்வாகத்தின் பதில்
அதாவது குஜராத் அணியின் மூத்த அதிகாரி ஒருவர் ரெய்னா அணியில் இணைவது குறித்து பேட்டியளித்துள்ளார். அதில், ரெய்னாவை குஜராத் டைட்டான்ஸ் அணியில் சேர்க்கவில்லை. அவரை அணியில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இதுவரை எங்களுக்கு வரவில்லை. அவரையெல்லாம் எடுக்க வேண்டுமா? என்பது போல தடாலடியாக கூறியுள்ளார்.
Recommended Video

கொந்தளிக்கும் ரசிகர்கள்
இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. ரெய்னாவை சேர்த்துக்கொள்ளுங்கள், உங்கள் அணிக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என கூறி வந்த ரசிகர்கள் தற்போது, ரெய்னாவை அசிங்கப்படுத்திவிட்டீர்களே என இணையத்தில் விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications