Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கபில்தேவ் போல் மாறும் ஹர்திக்.. முதலிடத்திற்கு வந்த குஜராத்.. பட்லரின் காட்டு அடி வீண்

மும்பை: ஐபிஎல் தொடரின் 24வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 8 புள்ளிகளுடன் குஜராத் அணி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நவி மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது.

குஜராத் அணியில் சாய் சுதர்சன் அதிரடியாக நீக்கப்பட்டு, விஜய் சங்கர் நியமிக்கப்பட்டார். இத்ற்கு ஹர்திக் பாண்டியா மீது கடும் விமர்சனம் எழுந்தது. ஆனால் அதற்கு பாண்டியா பேட்டிங் மூலம் தன்னை காப்பாற்றி கொண்டார்.

தடுமாறிய குஜராத்

தடுமாறிய குஜராத்

தொடக்க வீரராக களமிறங்கிய மேத்தீவ் வெட் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதே போன்று சுப்மான் கில்லும் 13 ரன்களுக்கு வெளியேற, விஜய் சங்கர் 2 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் குஜராத் அணி 53 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், அபினவ் மனோகரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.

ஹர்திக் அடி

ஹர்திக் அடி

அபினவ் மனோகர் 28 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். மறுமுனையில் ஹர்திக் பாண்டியா தனது வழக்கமான அதிரடியை வெளிக்காட்டினார். 4 சிக்சர், 8 பவுண்டரிகளை விளாசிய ஹர்திக் பாண்டியா 52 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார். இறுதியில் டேவிட் மில்லர் தனது பழைய ஃபார்மை மீண்டும் வெளிகாட்டினார். 14 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகளும், ஒரு சிக்சர் அடங்கும். இதனால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது.

பட்லர் அரைசதம்

பட்லர் அரைசதம்

இதனையடுத்து ராஜஸ்தான் அணி 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்கம் முதலே ஜாஸ் பட்லர் காட்டு அடி அடிக்க அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 49ஆக இருந்த போது ஜாஸ் பட்லர் மட்டுமே 48 ரன்களை அடித்திருந்தார். சிக்சர், பவுண்டரி என தெறிக்கவிட்டார் பட்லர். 23 பந்துகளில் ல் பட்லர் அரைசதம் அடித்தார். எனினும் அவர் ஆட்டமிழந்த உடன் ராஜஸ்தான் அணி சரிவை நோக்கி சென்றது.

ராஜஸ்தான் தோல்வி

ராஜஸ்தான் தோல்வி

கேப்டன் சஞ்சு சாம்சன் 11 ரன்கள் எடுத்த இருந்த போது ரன் அவுட்டாக, ஆட்டம் தலைக்கீழ் மாறியது.வெண்டர்டுசனும் சொற்ப ரன்களில் வெளியேற, ஷிம்ரன் ஹேட்மயர் தனி ஆளாக நின்று போராடினார். எனினும் ஹேட்மயர், ரியான் பராக், ஜேம்ஸ் நிஷம் ஆகியோர் முக்கிய கட்டத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 155 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து தோல்வியை தழுவியது. அஸ்வினை 3வது வீரராக களமிறக்கியதால் பேட்டிங் வரிசையில் நிலையற்ற தன்மை உருவாகி அந்த அணி தோல்வியை தழுவியது.

Story first published: Thursday, April 14, 2022, 23:54 [IST]
Other articles published on Apr 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+