Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்றைய ஐபிஎல் போட்டி.. ரசிகர்களை தூண்டும் சுவாரஸ்ய விஷயங்கள்..முதல் வெற்றிக்காக லக்னோ vs குஜராத் மோதல்

மும்பை: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஐபிஎல் தொடர் தொடங்கிய 2 நாட்களில் சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி தோல்விகள், 200 ரன்கள் டார்கெட் என பல சுவாரஸ்யங்கள் அதிகரித்துவிட்டன.

இந்நிலையில் இன்று அதனை மேலும் அதிகரிக்கும் விதமாக 2 புதிய அணிகள் தங்களது முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்குகின்றன.

 ஐபிஎல் இன்றைய போட்டி

ஐபிஎல் இன்றைய போட்டி

ஐபிஎல் தொடரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள குஜராத் டைட்டான்ஸ் அணியை மும்பை முன்னாள் வீரர் ஹர்திக் பாண்ட்யா வழிநடத்துகிறார். லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி கே.எல்.ராகுல் தலைமையில் களமிறங்குகிறது. இவர்கள் மோதும் போட்டி பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக விளங்கும் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

குஜராத்தின் பலவீனம்

குஜராத்தின் பலவீனம்

குஜராத் அணியை பொறுத்தவரையில் பேட்டிங் ஆர்டர் பெரியளவில் அனுபவமானதாக இல்லை. அணியில் ரஷித் கான், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, ராகுல் தேவாட்டியா, விஜய் சங்கர் ஆகியோரை நம்பி மட்டுமே இருக்கும் எனத் தெரிகிறது. இதே போல இந்தாண்டு ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கும் வீசுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

லக்னோ பலவீனம்

லக்னோ பலவீனம்

லக்னோ அணியை பொறுத்தவரை முற்றிலும் ஆல்ரவுண்டர்கள் நிறைந்த அணி என்று கூறலாம். ஜேசன் ஹோல்டர், க்ருணால் பாண்ட்யா, ஆன்ரூவ் டை, மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் சஹார் என அட்டகாசமான ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். அந்த அணியின் பலவீனம் என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட சிறந்த ப்ளேயிங் 11 மட்டுமே வைத்துள்ளனர். மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டவர்கள் பெரியளவில் அனுபவம் இல்லாதவர்கள் ஆகும்.

கேப்டன்களுக்கு ஜாக்பாட்

கேப்டன்களுக்கு ஜாக்பாட்

கே.எல்.ராகுல் இதற்கு முன்னர் பஞ்சாப் அணியை வழிநடத்தியுள்ளார். ஆனால் அந்த அணி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் லக்னோ அணியில் தனது கேப்டன்சியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கே.எல்.ராகுல் உள்ளார். இதே போல மற்றொரு புறம் ஹர்திக் பாண்ட்யா ஒரு கேப்டனாக மட்டுமின்றி தன்னை ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Story first published: Monday, March 28, 2022, 14:07 [IST]
Other articles published on Mar 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+