For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குஜராத் பலே ஆட்டம்..பிளே ஆப்க்கு கிட்டதட்ட தகுதி.. பெங்களூருக்கு சோகத்தை கொடுத்த திவேட்டியா, மில்லர்

பெங்களூரு: ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் அணி தகுதி பெறும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

43வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியுடன், குஜராத் டைட்டன்ஸ் அணி மோதின. இதில் டாஸ் வென்ற கேப்டன் டுபிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆர்சிபி அணியில் மஹிபால் லோம்ரர் சேர்க்கப்பட்டார். 4 ஆண்டுகளுக்கு பிறகு பிரதீப் சங்வான் ஐபிஎல் போட்டியில் விளையாடினார்.

டுபிளஸிஸ் டக் அவுட்

டுபிளஸிஸ் டக் அவுட்

தொடக்க வீரராக கோலியும், டுபிளஸிசும் களமிறங்கினர். டுபிளஸிஸ் சங்வான் பந்துவீச்சில் டக் அவுட்டானார். இதனையடுத்து கோலியுடன் ரஜித் பட்டிடார் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஒருபுறம் கோலி பொறுமையாக விளையாட பட்டிடார் அதிரடியாக ஆடி 32 பந்துகளில் 52 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கோலி தனது அசத்தலான ஷாட்களால் அரைசதம் அடித்தார். எனினும், தனது ஸ்கோபர் அடிக்கும் வேகத்தை உயர்த்தும் முனைப்பில் 58 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பெங்களூரு 170 ரன்கள்

பெங்களூரு 170 ரன்கள்

இருப்பினும் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் இம்முறை அபாரமாக விளையாடினார். 18 பந்துகளில் 33 ரன்களை மேக்ஸ்வெல் விளாசினார். இதில் 3 பவுண்டரியும், 2 சிக்சரும் அடங்கும். மபுல் லோம்ரர் 8 பந்துகளில் 16 ரன்கள் விளாசினார். இதனால் 150 ரன்கள் மட்டுமே அடித்திருக்க வேண்டிய ஆர்சிபி 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்தது.

அபார தொடக்கம்

அபார தொடக்கம்

இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி வீரர்கள் விளையாடியது. சாஹா 29 ரன்களிலும், சுப்மான் கில் 31 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை அணிக்கு தந்தனர். சாய் சுதர்சன் 20 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 3 ரன்களிலும் ஆட்டமிழக்க, குஜராத் அணி 95 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

8வது வெற்றி

8வது வெற்றி

43 பந்துக்கு 71 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த மில்லர், ராகுல் தேவட்டியா ஜோடி பேட்டிங்கில் மாஸ் காட்டினர். திவேட்டியா 25 பந்துகளில் 43 ரன்கள் விளாச, மில்லர் 24 பந்துகளில் 39 ரன்கள் குவிக்க, கடைசி ஓவரில் எளிதாக குஜராத் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 16 புள்ளிகளுடன் குஜராத் பிளே ஆப் சுற்று வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.

Story first published: Saturday, April 30, 2022, 21:17 [IST]
Other articles published on Apr 30, 2022
English summary
IPL 2022- Gujarat titans Beat RCB and registered 8th win குஜராத் பலே ஆட்டம்..பிளே ஆப்க்கு கிட்டதட்ட தகுதி.. பெங்களூருக்கு சோகத்தை கொடுத்த திவேட்டியா, மில்லர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+