8 பவுலர்களுடன் ப்ளேயிங்11.. பழி தீர்க்க பாண்ட்யாவின் முடிவு.. களைக்கட்டும் குஜராத் - ஐதராபாத் போட்டி
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
40வது லீக் போட்டியாக நடைபெறும் இந்த மோதலில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
புள்ளிப்பட்டியலில் 6 வெற்றிகளுடன் குஜராத் அணி 2வது இடத்திலும், தொடர்ச்சியாக 5 வெற்றிகளுடன் ஐதராபாத் அணி 3வது இடத்திலும் உள்ளதால் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்ய ஆட்டம்
இதற்காக ஐதராபாத் அணியில் முக்கிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அந்த அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். தற்போது குணமடைந்து, அதே அணிக்கு எதிராக மோதுகிறார்.

8 பவுலர்கள்
இதே போல குஜராத் அணியும் முழு பலத்துடன் களத்தில் குதித்துள்ளது. அதாவது அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்ட்யா, எங்கள் அணியில் ஏற்கனவே 7 பவுலர்கள் உள்ளனர். தேவைப்பட்டால் நானும் பவுலிங் செய்வேன் என்பதால் பெரும் பலத்துடன் இருப்பதாக கூறினார்.

ப்ளேயிங் 11 விவரம்
குஜராத் அணி : விருதிமான் சாஹா, சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தேவட்டியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், லாக்கி ஃபெர்க்யூசன், யாஷ் தயால், முகமது ஷமி
ஐதராபாத் அணி: அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி, எய்டன் மர்க்ரம், நிகோலஸ் பூரண், சஷாங் சிங், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜேன்சன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி.நடராஜன்
Recommended Video

பழிதீர்க்குமா குஜராத்
இரு அணிகளும் மோதிய முதல் லீக் போட்டியில் ஐதராபாத் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே இன்றைய போட்டியில் குஜராத் அணி பதிலடி கொடுக்க வேண்டும். குஜராத் வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்தை பிடித்துவிடும். ஒருவேளை ஐதராபாத் அணி வெற்றி பெற்றுவிட்டால் குஜராத் அணியை முந்தி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடிக்கும். எனவே யார் ராஜாவாக போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications