For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கணிப்புகளை பொய்யாக்கிய குஜராத்.. பலவீனமாக தோன்றிய அணி, பிளே ஆஃப்க்கு சென்றது எப்படி?

மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தின் முடிவில் குஜராத் அணி தான் பிளே ஆப்க்கு முதல் அணியாக செல்லும் என்று யாராவது சொல்லி இருந்தால் எவரும் நம்பி இருக்க மாட்டார்கள்.

Recommended Video

Gujarat Titans Team Captain Hardik Pandya-ன் பொறுப்பான பேச்சு... பாராட்டும் ரசிகர்கள்

ஐபிஎல் மெகா ஏலத்தின் போது குஜராத் அணி விக்கெட் கீப்பரையே கடைசி ரவுண்டில் தான் தேர்வு செய்தது. அந்த அழகில் இருந்தது அவர்கள் தேர்வு.

ஒரு அணிக்கு தேவையான பினிஷர் என்று யாருமே இல்லாத நிலையில் தான் அணி வடிவமைக்கப்பட்டு இருந்தது.

விமர்சனம்

விமர்சனம்

இதை தவிர, ஒரு அணிக்கு முக்கியம் என்றால் கேப்டன் தான். கேப்டன் பொறுப்புக்கு ஹர்திக் பாண்டியா தான் நியமிக்கப்பட்டு இருக்கிறார் என தெரிந்தவுடன், ஹர்திக்கின் பயிற்சியாளரே , அவர் கேப்டன் பொறுப்புக்கு சரியான நபரா என்று தெரியவில்லை என்று கூறினார். இதற்கு அனைத்துக்கும் மேல், ஆர்சிபியில் இருக்கும் போது அனைவராலும் கிண்டல் செய்யப்பட்ட ஆஷிஸ் நெஹ்ரா பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது தான்.

கட்டாயம்

கட்டாயம்

அணியில் தேர்வு செய்யப்பட்ட சுப்மான் கில், ராகுல் திவாட்டியா, டேவிட் மில்லர், ஹர்திக் பாண்டியா என யாருமே ஃபார்மில் இல்லை. அப்படி இருக்க, அனைத்துமே தலைக்கீழ் மாறியது எப்படி? குஜராத் அணியில் தேர்வு செய்யப்பட்ட சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, ராகுல் திவாட்டியா என மூவருமே தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

சரியாக பயன்படுத்தினர்

சரியாக பயன்படுத்தினர்

இதற்கு அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு தான் ஐபிஎல் தொடர். இதனால், மூவரும் ஓய்வு நேரத்தில் கடும் பயிற்சி மேற்கொண்டு தயாராகினர். இதனால் தொடர் தொடக்கத்தில் இருந்தே சுப்மான் கில் , ஹர்திக் பாண்டியா ஆகியோர் கலக்கினர். ஃபினிஷர் என்று யாரும் இல்லை என நினைத்த போது தான் டேவிட் மில்லரும், ராகுல் தேவட்டியாவும் கைக்கொடுத்தனர்.

தோனி லாஜிக்

தோனி லாஜிக்

டெஸ்ட் அணிக்கு தான் இனி ஷமி தேவை என்று சொன்ன போது, தமக்கு டி20யிலும் விளையாட தெரியும் என நிரூபித்து காட்டியுள்ளார் ஷமி. குஜராத் அணியின் ஒரே ஃபெயிலியரான விஜய் சங்கருக்கு, மாற்று வீரராக களமிறங்கிய சாய் சுதர்சனும் அசத்தினார். தோனி எப்போதுமே சொல்வார், ஒவ்வொரு வீரருக்கும் ஒரு பொறுப்பை வழங்கி, அதில் கவனம் செலுத்தி, அதனை வீரர்கள் சரியாக செய்தாலே வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

வெற்றிக்கு காரணம்

வெற்றிக்கு காரணம்

குஜராத் அணியும், அதனை தான் செய்தது. உங்களுக்கு இது தான் பொறுப்பு என பிரித்து வழங்கியது. உங்களால் முடியாது என்று பலரும் கூறுகின்றனர், அதற்காக நீங்கள் செய்து காட்டுங்கள் என ஒவ்வொரு வீரரையும் சூடு ஏற்றி, தற்போது பிளே ஆஃபில் குளிர் காய்கிறது குஜராத் அணி. ஆனால் ஒரு சீசனில் பூத்த பூவா, இல்லை எப்போதும் வீசும் காற்றா என்று எதிர்கால சீசன்களில் தான் தெரியும்.

Story first published: Wednesday, May 11, 2022, 12:28 [IST]
Other articles published on May 11, 2022
English summary
IPL 2022 – Gujarat Titans Team success formula Explained கணிப்புகளை பொய்யாக்கிய குஜராத்.. பலவீனமாக தோன்றிய அணி, பிளே ஆஃப்க்கு சென்றது எப்படி?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+