Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

8 பவுலர்கள்.. 8 பேட்ஸ்மேன்கள்.. குஜராத் அணியின் பக்கா ப்ளேயிங் 11.. தோனிக்கே டஃப் தரும் ஹர்திக்!!

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பக்காவான ப்ளேயிங் 11 உடன் களமிறங்க திட்டமிட்டுள்ளார் ஹர்திக் பாண்ட்யா.

ஐபிஎல் தொடரின் 4வது லீக் போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுமே ஐபிஎல்-க்கு புதிது என்பதால் முதல் போட்டியையே வெற்றியுடன் தொடங்க வேண்டும் என முணைப்புடன் உள்ளது.

பாண்ட்யாவின் வைராக்கியம்

பாண்ட்யாவின் வைராக்கியம்

இதில் ஹர்திக் பாண்ட்யாவின் மீது தான் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஃபார்ம் அவுட்டாகி மும்பை இந்தியன்ஸ் அணியால் கழட்டிவிடப்பட்ட ஒரு வீரருக்கு குஜராத் நிர்வாகம் கேப்டன் பதவி கொடுத்துள்ளது. எனவே ஒரு கேப்டனாகவும், ஒரு ஆல்ரவுண்டராகவும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஹர்திக் பாண்ட்யா இருக்கிறார். இதற்காக இன்றைய ப்ளேயிங் 11ம் கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஓப்பனிங்கிற்கு போட்டி

ஓப்பனிங்கிற்கு போட்டி

ஓப்பனிங்கிற்கு இந்திய வீரர் சுப்மன் கில் உறுதியாகியுள்ளார். மற்றொரு ஓப்பனராக மேத்யூவ் வேட் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் தேர்வில் இருந்தனர். ஆனால் பவர் ப்ளேவில் மேத்யூவ் வேட் நல்ல அதிரடி காட்டுவார் என்பதால் அவர் தான் கில்லுடன் களமிறங்குவார்.

மிடில் ஆர்டர் பேட்டிங்

மிடில் ஆர்டர் பேட்டிங்

முதல் விக்கெட்டிற்கு குர்கீரத் சிங் களமிறங்கலாம். உள்நாட்டு தொடர்களில் அட்டகாசமான ஃபார்மில் இருப்பதால் டாப் ஆர்டரில் அவருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து 4வது வீரராக விருதிமான் சாஹா உறுதி செய்யப்பட்டுள்ளார். 5வது வீரராக ஹர்திக் பாண்ட்யா களமிறங்குவார் என திட்டமிடப்பட்டுள்ளது. அணியின் லோயர் ஆர்டர் பேட்டிங்கிற்கு விஜய் சங்கர், ராகுல் தேவட்டியா, ரஷித் கான் என நல்ல அதிரடி வீரர்கள் இருக்கின்றனர்.

பவுலிங் படை

பவுலிங் படை

பந்துவீச்சை பொறுத்தவரை குஜராத் அணிக்கு அதிர்ஷ்டம் என்றே கூறலாம். வான்கடே மைதான வேகப்பந்துவீச்சு சாதகமாக இருக்கும். இதற்காக முழு நேர பவுலர்களாக முகமது ஷமி, டாமினிக் ட்ரேக்ஸ், லாக்கி ஃபெர்க்யூசன் உள்ளனர். இவர்களுடன் ஹர்திக் பாண்ட்யா, மேத்யூவ் வேட், விஜய் சங்கர் என 3 அட்டகாசமான வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் உள்ளனர்.

3 சுழற்பந்துவீச்சாளர்கள்

3 சுழற்பந்துவீச்சாளர்கள்

சுழற்பந்துவீச்சை பொறுத்தவரையில் உலகின் முன்னணி வீரரான ரஷித் கான் இருக்கிறார். இவருக்கு உறுதுணையாக இந்திய வீரர் ராகுல் தேவட்டியா முதன்மை தேர்வாக இருக்கிறார். ஒருவேளை போட்டியின் போது கூடுதல் ஸ்பின்னர் தேவைப்பட்டால் குர்கீரத் சிங் மான் பார்ட் டைம் ஸ்பின்னராக செயல்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

சுப்மன் கில், மேத்யூவ் வேட், விருதிமான் சாஹா, குர்கீரட் சிங், ராகுல் தேவட்டியா, ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், ரஷித் கான், முகமது ஷமி, டோமினிக் ட்ரேக்ஸ், லாக்கி ஃபெர்க்யூசன்

Story first published: Monday, March 28, 2022, 18:23 [IST]
Other articles published on Mar 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+