Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஜடேஜா தான் பிரச்சினையே.. தலைவலியாக இருக்கிறார்”.. சிஎஸ்கேவின் சொதப்பல்.. ஹர்பஜன் பளீர் பேச்சு!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா தான் தலைவலியாக இருப்பதாக ஹர்பஜன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் கடந்த சீசனின் சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் மிக மோசமாக விளையாடி வருகிறது.

சிஎஸ்கே அணி, தான் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வி பெறுவது இதுவே முதல்முறை என்ற சூழலை உருவாக்கிவிட்டது.

 சிஎஸ்கேவின் சோகம்

சிஎஸ்கேவின் சோகம்

முதலில் பேட்டிங் சரியில்லை என்ற குற்றச்சாட்டு, பின்னர் பவுலிங்கில் தீபக் சஹார் இல்லாதது, புது முக வீரர்களின் சொதப்பல் என அடுத்தடுத்த பிரச்சினைகளில் சிஎஸ்கே சிக்கியுள்ளது. இனி கட்டாயம் வெற்றி பெற்றால் தான் தொடரில் நீடிக்க முடியும் என்பதால் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹர்பஜன் சிங் பளீர்

ஹர்பஜன் சிங் பளீர்

இந்நிலையில் சிஎஸ்கே தோல்விக்கு கேப்டன் ஜடேஜா தான் காரணம் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சிஎஸ்கேவுக்கு புதிய கேப்டனாக பொறுப்பு கிடைத்துவிட்டது. ஆனால் ஜடேஜா ஃபீல்டிங் ரிங்கிற்கு வெளியில் நின்றுக்கொண்டிருக்கிறார். அங்கிருந்து ஒரு கேப்டனால் எந்தவொரு விஷயத்தையும் கையாள முடியாது.

 தோனிக்கு தலைவலி

தோனிக்கு தலைவலி

இதனால் அவர் தோனிக்கு தான் தலைவலி கொடுக்கிறார். ஃபீல்டிங் ரிங்கிற்கு உள்ளே நிற்கும் தோனி ஃபீல்ட் செட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து பணிகளையும் செய்கிறார். ஒரு அணியின் சிறந்த ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்றால், ஜடேஜா கண்டிப்பாக வாயை திறந்து பேசியாக வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

அதிரடி திட்டம்

அதிரடி திட்டம்

சிஎஸ்கே அணி அடுத்ததாக வரும் ஏப்ரல் 9ம் தேதியன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக மோதவுள்ளது. இந்த போட்டியில் கேப்டன்சி, ப்ளேயிங் 11 மாற்றம் என பல முக்கிய முடிவுகளுடன் ஜடேஜா கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, April 5, 2022, 20:10 [IST]
Other articles published on Apr 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+