Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கெத்து காட்டிய ஹர்திக் பாண்டியா.. தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றி.. டெல்லிக்கு முதல் தோல்வி

புனே: ஐபிஎல் 15வது சீசனில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார்.

டாஸ் வென்ற ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.குஜராத் அணியின் பிளேயிங் வெலனில் எவ்வித மாற்றமும செய்யப்படவில்லை.

ஆனால் டெல்லி அணி வங்கதேச புயல் முஸ்தபிகுர் ரஹிம்மை பிளேயிங் லெவனில் சேர்த்தது.

சரிவு

சரிவு

குஜராத் அணியின் தொடக்க வீரராக ஆஸ்திரேலிய வீரர் மேத்தீவ் வெடும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே மேத்தீவ் வெட் விக்கெட்டை ரஹிம் வீழ்த்தினார். இதன் பின்னர் களமிறங்கிய தமிழக வீரர் விஜய் சங்கரும் தொடர்ந்து 2வது முறையாக ரசிகர்களை ஏமாற்றினார். இதன் பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், சுப்மான் கில்லும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிவிருந்து மீட்டனர்.

சுப்மான் அதிரடி

சுப்மான் அதிரடி

இருவரும் அதிரடியாக விளையாட குஜராத் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். டேவிட் மில்லர் 20 ரன்கள், ராகுல் தேவதியா 14 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் தொடர்ந்து மறுமுனையில் அதிரடியை தொடர்ந்த சுப்மான் கில் 46 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். இதனால் குஜராத் அணி 171 ரன்கள் எடுத்தது.

டெல்லி தடுமாற்றம்

டெல்லி தடுமாற்றம்

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. டிம் செஃபர்ட் 3 ரன்களில் ஆட்டமிழக்க, பிரித்வி ஷா 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மந்தீப் சிங் 18 ரன்களில் பெவிலியன் திரும்ப டெல்லி அணி முதல் போட்டியில் போல் தடுமாறியது.

2வது வெற்றி

2வது வெற்றி

இதனால் அனைத்து பொறுப்பும் கேப்டன் ரிஷப் பண்ட் தலையில் வந்து விழுந்தது. ரிஷப் பண்ட் 29 பந்துகளில் 43 ரன்கள் விளாச,லலித் யாதவ் 25 ரன்கள் சேர்த்தார். அதிரடி வீரர் பொவேலும் சோபிக்க தவற, அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்கூர் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 157 ரன்களுக்கு 9 விக்கெட் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. பெகுர்சன் 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் 2வது வெற்றியை குஜராத் அணி பெற்றது.

Story first published: Saturday, April 2, 2022, 23:44 [IST]
Other articles published on Apr 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+