For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஒரு ரன் அவுட் தான்.. ரூ.40 லட்சம் வீணாக போச்சு.. ஹர்திக் பாண்ட்யா செய்த தவறால் பதறும் பிசிசிஐ!!

மும்பை: ஹர்திக் பாண்ட்யா ஒரு விநாடியில் செய்த விஷயத்தால் ரூ.40 லட்சம் பிசிசிஐ-க்கு பறிபோயுள்ளது.

Recommended Video

IPL 2022: Hardik Pandya's Throw Breaks Stump; Sends Sanju Samson | OneIndia Tamil

ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் குஜராத் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஹர்திக்கால் நஷ்டம்

ஹர்திக்கால் நஷ்டம்

இந்த போட்டியில் 52 பந்துகளை சந்தித்த ஹர்திக் பாண்ட்யா 87 ரன்களை விளாசினார். இதுதான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனினும் அதே போட்டியில் அவர் செய்த தவறு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனை ரன் அவுட்டாக்கியது தான்.

 ரன் அவுட்டானது எப்படி

ரன் அவுட்டானது எப்படி

ஆட்டத்தின் 8வது ஓவரின் போது ஃபெர்க்யூசன் வீசிய பந்தை சஞ்சு சாம்சன் மிட் ஆஃப் திசையில் அடித்துவிட்டு, சிங்கிள் எடுக்க ஓடினார். அப்போது சாதூர்யமாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா, டைரக்ட் த்ரோவால் ரன் அவுட் செய்தார். அவர் வீசிய வேகத்தில் மிடில் ஸ்டம்ப் இரண்டாக உடைந்தது. வெறும் ஸ்டம்பிற்காக நடுவர்கள் சில நிமிடம் பதற்றமடைந்தனர். பல் ஆலோசனைகள் நடந்தன.

ஸ்டம்பின் விலை?

ஸ்டம்பின் விலை?

இந்நிலையில் ஸ்டம்புகளுக்காக ஏன் கவலைப்பட்டனர் என தெரியவந்துள்ளது. ஐபிஎல்-ல் பயன்படுத்தப்படும் ஸ்டம்ப்களின் விலையை வைத்து, ஒரு டி20 போட்டியையே நடத்திவிடலாம். ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு ஊதியமாக ரூ.60 லட்சம் தரப்படும். டி20 கிரிக்கெட்டிற்கு ரூ.33 லட்சம் செலவாகும். ஆனால் இந்த ஸ்டம்ப்களின் விலையோ ரூ.40 லட்சம் ஆகும்.

என்ன ஸ்பெஷல்

என்ன ஸ்பெஷல்

ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்படும் இந்த ஸ்டம்ப்களை தான் ஐபிஎல்-ல் பயன்படுத்துகின்றனர். டி20 உலகக்கோப்பை தொடரிலும் இதுதான் பயன்படுத்தப்படுகிறது. ரன் அவுட் குழப்பங்களை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த ஸ்டம்ப்கள் ஒரு நொடியில் உடைந்து விட்டதால் பிசிசிஐ-க்கு சிரமம் ஏற்படுகிறது.

Story first published: Saturday, April 16, 2022, 21:07 [IST]
Other articles published on Apr 16, 2022
English summary
Hardik pandya brokes Stumps ( ஸ்டம்பை உடைத்த ஹர்திக் பாண்ட்யா ) ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா செய்த தவறு, பிசிசிஐ-க்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+