Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்குலி பாணியில் ஹர்திக் பாண்ட்யா.. 2001ல் செய்த அதே குசும்புத் தனம்.. ஐபிஎல் போட்டியில் கலகலப்பு!

புனே: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸின் போது ஹர்திக் பாண்ட்யா செய்த விஷயத்தால் கே.எல்.ராகுல் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தார்.

57வது லீக் போட்டியாக இரு அணிகளும் புனே மைதானத்தில் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டாஸில் குழப்பம்

எனினும் அந்த தேர்வில் தான் பிரச்சினையே வந்தது. டாஸின் போது கே.எல்.ராகுல் தான் நாணயத்தை போட்டார். அப்போது ஹர்திக் பாண்ட்யா எதை கேட்டார் என சத்தமாக கேட்கவில்லை. பின்னர் நாணயம் 'தலை' என விழுந்தது. இதனையடுத்து பாண்ட்யா, தான் தலை தான் கேட்டதாகவும், நான் தான் டாஸ் வென்றுவிட்டதாகவும் கூறினார்.

 அதிர்ந்த கே.எல்.ராகுல்

அதிர்ந்த கே.எல்.ராகுல்

இதனால் அதிர்ச்சியடைந்த கே.எல்.ராகுல், நீ " பூ" (டெயில்ஸ்) தான் கேட்டாய் என அதிர்ச்சியடைந்தார். மேலும் அங்கிருந்த நடுவரிடமும் முறையிட்டார். எனினும் ஹர்திக் பாண்ட்யா தலை தான் கேட்டதாக நடுவரே கூற கே.எல்.ராகுல் குழப்பம் தெளிந்து சென்றார். இந்நிலையில் இப்படி எதிரணி கேப்டனை குழப்புவதில் சவுரவ் கங்குலியின் ஸ்டைலை பாண்ட்யா செய்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 2001ல் என்ன நடந்தது

2001ல் என்ன நடந்தது

அதாவது கடந்த 2001ம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி இண்டூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி டெயில்ஸ் ( பூ ) தான் கேட்டார். நாணயமானது "தலை" ஆக விழுந்தது. எனினும் டெயில்ஸ் தான் விழுந்தது என கங்குலி எதிரணி கேப்டன் ஸ்டீவ் வாக்கை குழப்பினார். இதில் கிட்டத்தட்ட வாக் ஏமாந்தார் என்று தான் கூற வேண்டும்.

 நடுவரின் முடிவு

நடுவரின் முடிவு

கடைசியில் இந்த விவகாரத்தில் தலையிட்ட கள நடுவர், கங்குலியிடம் "தலை" தான் விழுந்தது எனக்கூறி ஆஸ்திரேலியா டாஸ் வென்றதாக அறிவித்தார். எனினும் அப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சச்சின் டெண்டுல்கர் 139 ரன்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, May 10, 2022, 22:26 [IST]
Other articles published on May 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+