For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“என்ன ஆனாலும் சரி.. அது நடக்கனும்” ஹர்திக் பாண்ட்யாவின் அடுத்த கனவு.. நெகிழ்ச்சி கடலில் ரசிகர்கள்!!

மும்பை: ஐபிஎல் தொடரை தொடர்ந்து தனது அடுத்தக்கட்ட சவால் குறித்து ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Recommended Video

IPL 2022 Award Winners: அசத்திய Butler, Dinesh Karthik | Aanee's Appeal | #Cricket

ஐபிஎல் 15வது சீசன் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பை வென்றது.

ராஜஸ்தான் அணிக்கு அடுத்ததாக, தனது அறிமுக சீசனிலேயே கோப்பை வென்ற அணி என்ற பெருமையை பெற்றது.

குஜராத் அணி வெற்றி

குஜராத் அணி வெற்றி

குஜராத் அணிக்கு முதுகெலும்பாக இருந்தது கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தான் ஆகும். காயத்தால் பாதிக்கப்படிருந்த அவர், இந்தாண்டு அட்டகாசமான கம்பேக் கொடுத்தார். பேட்டிங்கில் 15 இன்னிங்ஸில் 487 ரன்களை குவித்துள்ளார். பந்துவீச்சிலும் 8 முக்கிய விக்கெட்களை சாய்த்து அசத்தியுள்ளார். கேப்டனாகவும் தனது அணிக்கு கோப்பை வென்று கொடுத்துவிட்டார்.

பாண்ட்யாவின் அடுத்த சவால்

பாண்ட்யாவின் அடுத்த சவால்

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா தனது அடுத்த சவால் குறித்து பேசியுள்ளார்.அதில், எனது அடுத்த இலக்கு பெருமைக்குரிய ஒன்றாக இருக்கும். அது இந்திய அணிக்காக உலகக்கோப்பை வென்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான். என்ன நடந்தாலும் சரி, உலகக்கோப்பையை வென்றுக்கொடுக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.

எவ்வளவு நாளென்று தெரியாது

எவ்வளவு நாளென்று தெரியாது

என் நாட்டுக்காக விளையாடுவது எப்போதுமே பெருமைக்குரிய ஒன்றாகும். எத்தனை நாட்கள் விளையாடுகிறோம் என்பது தெரியவில்லை. ஆனால் உலகக்கோப்பை வென்றுவிட வேண்டும். இது மட்டும் தான் தற்போதைக்கு எனது மூளையில் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதற்கு தயாராவேன் என பாண்ட்யா கூறியுள்ளார்.

இந்திய அணி கேப்டன்

இந்திய அணி கேப்டன்

தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல அயர்லாந்து டி20 தொடருக்கும் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா தான் செயல்படவுள்ளார் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Monday, May 30, 2022, 19:43 [IST]
Other articles published on May 30, 2022
English summary
Hardik pandya's Next aim ( ஹர்திக் பாண்ட்யாவின் அடுத்த கனவு ) ஐபிஎல் கோப்பையை வென்றுக்கொடுத்த ஹர்திக் பாண்ட்யாவின் அடுத்த கனவு என்ன என்பதை தெரிவித்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+