Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“தம்பிகளா ஓரம் போங்க.. ”.. ஹர்திக் பாண்ட்யாவின் பதிலடி.. 2 வீரர்களின் தலையில் கை வைத்த பிசிசிஐ!!

ஹர்திக் பாண்ட்யாவின் ஃபார்மை பார்த்த பிசிசிஐ இந்திய அணிக்காக முக்கிய முடிவை கையில் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் புதிதாக வந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, மற்ற முன்னணி அணிகளை முந்தி கலக்கி வருகிறது.

இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

பாண்ட்யாவின் கம்பேக்

பாண்ட்யாவின் கம்பேக்

குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் தரமான கம்பேக் தான் காரணம் எனக் கூறலாம். காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே பேட்டிங், பவுலிங் என கலக்கி வருகிறார். இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 3 சதங்களை அடித்துள்ள அவர், நடப்பு சீசனில் அதிக ஸ்கோர் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

பந்துவீச்சில் அசத்தல்

பந்துவீச்சில் அசத்தல்

பந்துவீச்சிலும் தொடர்ந்து 140 கிமீ வேகத்திற்கு மேல் வீசி வருகிறார். பழைய மாதிரியே முக்கியமான கட்டங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். எனவே ஹர்திக் பாண்ட்யாவால் இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் இடங்கள் பறிபோகும் என எதிர்பார்க்கப்பட்டது.

பிசிசிஐ-ன் முடிவு

பிசிசிஐ-ன் முடிவு

இந்நிலையில் அதனையும் தாண்டிய ஒரு சிந்தனையில் பிசிசிஐ உள்ளது. அதாவது பாண்ட்யாவால் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது 34 வயதாகும் ரோகித் சர்மாவுக்கு அடுத்ததாக இந்திய அணி கேப்டனாக அவர்கள் இருவரும் தான் தயார் செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் இருவருமே ஏமாற்றத்தை மட்டுமே இதுவரை கொடுத்துள்ளனர்.

உலகக்கோப்பை ஸ்கெட்ச்

உலகக்கோப்பை ஸ்கெட்ச்

ரிஷப் பண்ட்-க்கு சூழலை பொறுத்து பொறுப்புடன் ஆடும் தன்மை இல்லை. கே.எல்.ராகுலின் கேப்டன்சியில் இந்திய அணி மிக மோசமாக தடுமாறியுள்ளது. எனவே இந்த ரேஸில் தற்போது குஜராத் அணியை சிறப்பாக வழிநடத்தும் ஹர்திக் பாண்ட்யா நுழைந்துள்ளார். டி20 உலகக்கோப்பை முதல் இந்தியாவின் துணைக் கேப்டனாக பாண்ட்யா செயல்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக மாறலாம். ரிஷப் பண்ட்-ன் இடம் காலி ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, April 23, 2022, 18:28 [IST]
Other articles published on Apr 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+