Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஸ்க்கே வேண்டாம்பா சாமி.. ஹர்த்திக் பாண்ட்யா அந்தர் பல்டி.. பஞ்சாப்புடனான மோதலில் திடீர் ட்விஸ்ட்!

மும்பை: ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய போட்டி இன்று தொடங்கியுள்ளது.

48வது லீக் போட்டியில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ரிஸ்க் வேண்டாம்

ரிஸ்க் வேண்டாம்

இந்த மைதானத்தில் 2வது பேட்டிங் செய்யும் அணி தான் அதிக முறை வெற்றி கண்டுள்ளது. ஆனால் பாண்ட்யா மட்டும் பேட்டிங் எடுத்துள்ளார். இந்த முடிவுக்கு பின்னர் பரபரப்பு வேண்டாம் என்பது தான் காரணமாக தெரிகிறது. குஜராத் அணியின் டாப் ஆர்டர் சற்று சொதப்பி வருகிறது. கடந்த 2 போட்டிகளிலும் ரஷித் கான், ராகுல் தெவாட்டியா ஆகியோர் கடைசி பந்தில் பவுண்டரி, சிக்ஸர் அடித்தது தான் வெற்றிக்கு காரணமாக அமைந்தது கடைசி வரை வெற்றி பெறுமா? இல்லையா? என்ற பரபரப்பும் இருந்தது.

பாண்ட்யாவின் விளக்கம்

பாண்ட்யாவின் விளக்கம்

எனவே இந்த முறை ரிஸ்க் எடுக்க முன்வராமல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, இங்கு 2வது இன்னிங்ஸில் பனிப்பொழிவு இருக்கும் எனத் தோன்றவில்லை. எனவே முதலில் பேட்டிங்கை செய்யவுள்ளோம் எனக் கூறியுள்ளார்.

சிக்கலில் பஞ்சாப் அணி

சிக்கலில் பஞ்சாப் அணி

குஜராத் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிட்டது. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றால் தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கும்.

ஒருவேளை வெற்றி பெற்றால்

ஒருவேளை வெற்றி பெற்றால்

ஒருவேளை பஞ்சாப் அணி வெற்றி பெற்றுவிட்டால் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறவும் வாய்ப்புள்ளது. இதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டி மிகவும் கடுமையானதாக மாறிவிடும். எனவே இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

GT vs RCB : Rahul Tewatia Fires Gujarat Titans To Victory | Oneindia Tamil
ப்ளேயிங் 11 மாற்றம்

ப்ளேயிங் 11 மாற்றம்

பஞ்சாப்: மயங்க் அகர்வால், ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, பனுக்கா ராஜபக்ச, லியாம் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, ரிஷி தவான், ககிஸ்கோ ரபாடா, ராகுல் சஹார், அர்ஷ்தீப் சிங், சந்தீப் சர்மா

குஜராத் டைட்டன்ஸ் : விருதிமான் சாஹா, சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா , ரஷித் கான், அல்சாரி ஜோசஃப், பிரதீப் சங்வான், லாக்கி ஃபெர்க்யூசன், முகமது ஷமி

Story first published: Tuesday, May 3, 2022, 20:58 [IST]
Other articles published on May 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+