
ஐதராபாத் அணி மாற்றம்
தொடரின் முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஐதராபாத் அணி, தனது 3வது போட்டியில் சிஎஸ்கேவை எதிர்த்து வெற்றி பெற்றது. அதுவும் டாப் ஆர்டரில் அசத்தல் பேட்டிங்கால் வென்றது. எனவே அந்த வெற்றி பாதை தொடர வேண்டும் என்பதற்காக அதே ப்ளேயிங் 11 உடன் களமிறங்குவதாக கேப்டன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.

குஜராத் மாற்றம்
இதே போல ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த தொடரில் கலக்கி வருகிறது. இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. குறிப்பாக கடைசியாக விளையாடிய போட்டியில் ராகுல் தேவாட்டியா கடைசி 2 பந்துகளில் சிக்ஸர் விளாசி த்ரில் வெற்றி பெற்றுத் தந்தார். ஓப்பனிங்கில் மேத்யூவ் வேட் மட்டும் மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே ப்ளேயிங் 11 உடன் களமிறங்கவுள்ளதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

தமிழக வீரர் மீது நம்பிக்கை
கடந்த போட்டியில் அறிமுகமான தமிழக வீரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடியிருந்தார். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கு 30 பந்துகளில் 35 ரன்களை சேர்த்திருந்தார். இதனையடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளார் ஹர்திக் பாண்ட்யா. அவர் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிகிறது.

அதிரடி உண்டா?
இன்றைய போட்டி நடைபெறும் DY பாட்டில் மைதானத்தின் பிட்ச் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது பிட்ச்-ல் பாதி இடங்களில் அடர்த்தியான புற்கள் மற்றும் ஒருசில இடங்களில் வரண்டும் உள்ளது. இதனால் இங்கு நல்ல பவுன்சாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல ஸ்பின்னர்களும் முன்கூட்டியே கொண்டு வரப்படலாம்.

அணி மாற்றங்கள்
குஜராத் அணி : மேத்யூவ் வேட், சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் தேவட்டியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி ஃபெர்க்யூசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே
ஐதராபாத் அணி : அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரண், எய்டன் மர்கரம், சஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி.நடராஜன்


Click it and Unblock the Notifications











