For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே போட்டியில் இவ்வளவு சாதனைகளா??.. லக்னோ - குஜராத் அணிகள் மோதல்.. நட்சத்திர வீரர்களுக்கு ஜாக்பாட்!!

மும்பை: ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பல்வேறு வீரர்களும் பெரும் சாதனைகளை படைக்கவுள்ளனர்.

இன்று மும்பை வான்கடேவில் நடைபெறும் 4வது லீக் போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுமே ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாடுவதால், வெற்றியுடன் தொடங்க முணைப்பு காட்டி வருகிறது.

வீரர்களின் சாதனைகள்

வீரர்களின் சாதனைகள்

ஐபிஎல் தொடரில் இரு அணிகளுமே புதிதாக இருந்தாலும், முதல் போட்டியிலேயே அதன் வீரர்கள் சாதனை படைக்கவுள்ளனர். இதில் முதலாவது நபர் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தான். அதிரடிக்கு புகழ்பெற்ற ஹர்திக் பாண்ட்யா இன்னும் 2 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 100 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைவார். இதே போல இன்னும் 24 ரன்களை அடித்தால் ஐபிஎல் தொடரில் 1500 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டுவார்.

50 அரைசதம்

50 அரைசதம்

லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக விளையாடுவார். அவர் இன்னும் 2 பவுண்டரிகள் மட்டும் அடித்தால் டி20 கிரிக்கெட்டில் 500 பவுண்டரிகளை கடப்பார். இதே போல அவர் இன்னும் ஒரே ஒரு அரைசதம் அடித்தால் டி20 கிரிக்கெட்டில் தனது 50வது அரைசதத்தை பூர்த்தி செய்வார்.

மேலும் 2 பேர்

மேலும் 2 பேர்

லக்னோ அணியின் தொடக்க வீரர் எவின் லீவிஸ் இன்னும் 5 பவுண்டரிகள் அடித்தால் டி20 கிரிக்கெட்டில் 450 பவுண்டர்களை கடப்பார். லக்னோ அணியில் முன்னணி பவுலராக இடம்பெற்றுள்ள சபாஷ் நதீம் இன்றைய போட்டியில் 2 விக்கெட்களை கைப்பற்றினால் ஐபிஎல் தொடரில் 50 விக்கெட்களை கடப்பார்.

இக்கட்டான நிலைமை

இக்கட்டான நிலைமை

இப்படி முதல் போட்டியே பல வீரர்களுக்கும் புதிய மைல்கல்லை எட்டும்படியாக அமைந்துள்ளது. கே.எல்.ராகுல் பஞ்சாப் அணியின் கேப்டனாக சிறப்பாக சோபிக்கவில்லை. இதனால் தனது கேப்டன்சியை திறமையை நிரூபிக்க வேண்டும். இதே போல ஹர்திக் பாண்ட்யாவும் தனது பேட்டிங் மற்றும் பவுலிங்கை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Story first published: Monday, March 28, 2022, 22:01 [IST]
Other articles published on Mar 28, 2022
English summary
GT vs LSG Stats and Records ( குஜராத் vs லக்னோ அணி மோதல் ) குஜராத் டைட்டான்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் இன்று போட்டியில் பல முன்னணி வீரர்களும் சாதனைப்படைக்கவுள்ளனர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+