பரபரப்பை ஏற்படுத்திய ஆண்ட்ரே ரஸல்.. நிம்மதியின்றி சுற்றிய ஹர்திக்.. த்ரில் வெற்றி பெற்றது எப்படி??
மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.
Recommended Video
இரு அணிகளும் மோதிய 35வது லீக் போட்டி மும்பை DY பாட்டில் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நடப்பு சீசனில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த முதல் அணி குஜராத் தான் ஆகும்.

பாண்ட்யா அதிரடி
இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 49 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 67 ரன்களை விளாசினார். அடுத்து வந்த டேவிட் மில்லர் 27 ரன்கள் விளாச 20 ஓவர்களில் குஜராத் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்களை சேர்த்தது.

கொல்கத்தா பேட்டிங்
157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள், குஜராத் பவுலர்களை சமாளிக்க முடியவில்லை. சாம் பில்லிங்ஸ் (4), சுனில் நரேன் (5), ஸ்ரேயாஸ் ஐயர் (12), நிதிஷ் ராணா (2) என அடுத்து ஏமாற்றினர். ரிங்கு சிங் மட்டும் 35 ரன்கள் அடிக்க கொல்கத்தா அணி 15 ஓவர்களில் 108 ரன்களுக்கெல்லாம் 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ரஸல் அதிரடி
இதன் பின்னர் வந்த ஆண்ட்ரே ரஸல் தான் ஆட்டத்தையே மாற்றி அமைத்தார். வழக்கம் போல் அவர் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதால், கொல்கத்தா அணிக்கு கடைசி 6 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்டது. அல்சாரி ஜோசப் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தே சிக்ஸருக்கு விளாசி பயமுறுத்தினார். எனினும் ஹர்திக் பாண்ட்யா போட்ட ஷார்ட் பால் ஸ்கெட்ச்சால் அடுத்த பந்தே அவுட்டானார். 25 பந்துகளை சந்தித்த அவர் 48 ரன்களை விளாசி வெளியேறினார்.

த்ரில் வெற்றி
ரஸலின் விக்கெட்டால் கடைசி 4 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கொல்கத்தா அணியால் 4 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் புள்ளிப்பட்டியலிலும் தனது 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.


Click it and Unblock the Notifications