
ஹர்திக் பாண்ட்யா
காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த வீரர்கள் மட்டும் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்ற நிலையில், ஹர்திக் பாண்ட்யாவும் அங்கு அழைக்கப்பட்டிருந்தார். இதற்கு காரணம் கடந்த முறை அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக மும்பை அணி கூறியதை அடுத்து டி20 உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்து பிசிசிஐ ஏமாந்தது. எனவே இந்த முறை அவரின் உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே ஐபிஎல் தொடருக்குள் அனுமதிக்கப்படுவார் என உத்தரவு போடப்பட்டது.

இக்கட்டான நிலை
இதனை வைத்து தான் ஹர்திக் இந்திய அணிக்கே திரும்ப முடியும் என்ற இக்கட்டான சூழல். இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் அவர் தனது முழு உடற்தகுதியை நிரூபித்து காட்டிவிட்டதாக என்சிஏ பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார்.

தேர்வு புள்ளிகள்
யோ யோ தேர்வில் ஒரு வீரர் குறைந்தபட்சம் 16.5 புள்ளிகள் பெற வேண்டும். ஆனால் ஹர்திக் 17 புள்ளிகளை பெற்றுள்ளார். மேலும் பந்துவீச்சிலும் 135 கிமீ வேகத்தில் வீசி, தான் ஒரு ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார். இதனையடுத்து நேரடியாக மும்பைக்கு பறந்துள்ளார்.

நேரடியாக வாய்ப்பு
ஒருவேளை ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தனது உடற்தகுதியை நிரூபித்துவிட்டால், இந்திய அணியில் இடம்பெறுவது மிகவும் சுலபம் ஆகிவிடும். அடுத்ததாக வரும் இங்கிலாந்து தொடரில் இருந்தே கூட அவருக்கான இடம் இந்திய ப்ளேயிங் 11ல் உறுதியாகும், என்றும் வெங்கடேஷ் ஐயரின் இடம் கேள்விக்குறியாகும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications